களுத்துறையில் சிங்கள பாடசாலையொன்றில் பணியாற்றும் முஸ்லிம் ஆசிரியை ஒருவருக்கு நாளை புதன்கிழமை
பாடசாலைக்கு வரும்போது அவர் அணியும் ஹிஜாபை கழற்றிவிட்டே வரவேண்டுமென
ஆசிரியர் ஆலோகரான பௌத்த பிக்கு ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்றுநேரத்திற்கு முன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட அந்த ஆசிரியை இதனை தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை குறித்த பாடசாலைக்குச் சென்றுள்ள ஆசிரியர் ஆலோசகரான குறித்த பௌத்த பிக்கு இந்த முஸ்லிம் ஆசிரியையை எதிர்கொண்டபோது,
நாங்கள் ஹலால்க்கு முடிவு கட்டிவிட்டோம். இப்போது எஞ்சியிருப்பது முஸ்லிம்கள் அணியும் ஹிஜாப்தான். நீங்கள் புதன்கிழமை பாடசாலைக்கு வரும்போது இந்த ஹிஜாப்பை கழற்றிவிட்டே வரவேண்டும் என எச்சரித்துள்ளார்.
பௌத்த தேரரின் இந்த எச்சரிக்கைக்கு மிக நிதானமாக பதில் வழங்கியுள்ள குறித்த ஆசிரியை,
நான் மௌத்தாகும் வரைக்கும் என்ற உடம்பை இந்த ஹிஜாப் அலங்கரிக்கும். உடம்பில் உயிருள்ள வரைக்கும் இந்த ஹிஜாப்பை கழற்றமாட்டேன் என மிகத் திட்டவட்டமாக பதில் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறுகையில்,
எனக்கு தொழில் முக்கியமல்ல. என்னுடைய மார்க்கம் எனக்கு முக்கியமானது. நான் இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை எனது பாடசாலைக்கு செல்வேன். ஹிஜாப்புடன்தான் செல்வேன். இதுகுறித்து எனது சட்டத்தரணியுடனும் ஆலோசனை நடத்தினேன். எனக்காக துஆ செய்யுங்கள் எனவும் அந்த முஸ்லிம் ஆசிரியை மேலும் கூறினார்.

0 கருத்துகள்: