இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாகக்
குறிப்பிட்ட கள்-எளிய விகாரையின் விகாராதிபதி போரசிரியர் ராஜ பண்டித்த
சோபித்த மகாநாயக்க தேரர், சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு
மதத் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா பராயிமுல் இஸ்லாம் மாவட்ட மட்ட ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய கலாசாரப் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையின் ஏ.எச்.எம்.அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பராயிமுல் இஸ்லாம் அமைப்பின் தலைவர் முஹம்மது நிஜாம் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய தேரர் மேலும் பேசுகையில்,
எமது நாட்டில் வாழும் மக்கள் சமய, கலாசார விடயங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் என்ற ஒரே கட்டமைப்பில் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வாழும் பௌத்தர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் அவரவர் சமயங்களை, சமய கலாசார விழுமியங்களை கடைப்பிடிப்பது. நடைமுறைப்படுத்துவது என்பது அவர்களுடைய கடமையும், உரிமையுமாகும்.
இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்ட ஹலால் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் மறு பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது என்பதே முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பிரச்சினையாகும்.
இலங்கையில் வாழும் மக்கள் தத்தமது கலாசார உடைகளை அணிந்து வருகிறார்கள். அது போலவே முஸ்லிம் பெண்களும் தமது பாராம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிகிறார்கள். இதில் கைவைப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.
சுமார் 30 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிக்கிடந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் வாழும் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவது ஒவ்வொரு மத்தத்தையும் சார்ந்த மதப்பெரியார்களின் கடமையாகும்.
எனவே இலங்கையில் வாழும் மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவற்கு முஸ்லிம் மௌலவிமார்கள் முயற்சிகளை எடுத்தால் அவர்களுடன் இணைந்து நானும் நாட்டு மக்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள தயார் என்றார்.

0 கருத்துகள்: