பழனி அருகே பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டிய ஆசிரியரை பொதுமக்களே பிடித்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பதினாறு புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெயச்சந்திரன் (வயது 33) பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி மாணவிகளிடம் செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி சில்மிஷம் செய்வராம்.
நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஜெயச்சந்திரன் ஆபாச படங்களை காட்டியுள்ளார். இதைக்கண்டு பயந்து போன மாணவி அழுது கொண்டே சென்று தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், ஊர் பொதுமக்களும் பள்ளிக்கு திரண்டு வந்து ஆசிரியர் ஜெயச்சந்திரனை பிடித்து அடித்தனர். மேலும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். வேதனை தாங்காமல் ஆசிரியர் அலறினார். இந்த தகவல் காட்டு தீ போல பரவியது.
தகவல் அறிந்ததும் அங்கு வந்த போலீசார் ஆசிரியரை மீட்டனர். ஆனாலும் பொது மக்களின் ஆத்திரம் தீரவில்லை. ஆசிரியரை செருப்பால் அடித்தனர். ஆசிரியரை கைது செய்யக் கோரினர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. குப்புராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் ஜெயசந்திரனை கைது செய்தனர். ஆசிரியரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உயரதிகாரிகள் உறுதியளித்த பின்னரே பொது மக்கள் கலைந்து சென்றனர்.

0 கருத்துகள்: