இது சிறுபான்மை முஸ்லிம்கள் மீது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல், மார்ச் 20 இல் ஆரம்பித்த இந்த வன்முறையில் இன்றுவரை (22 மார்ச்) 47 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் 11 பெண்களும், 28 மத்ரச மாணவர்களும், 5 ஆசிரியர்களும் அடங்குவர். ரோஹிங்கிய அமைப்பு இங்கிலாந்து (BROUK) இனால் வெளியிடப்பட்டுள்ள
ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

"முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்கள் சமீபத்திய வாரங்களில் பர்மாவில் வலிமை பெற்று வருகிறது. ஜனாதிபதி Thein Seinஇன் அரசாங்கம் தாக்குதல்களை தூண்டிவிடுவதொடு வளரும் முஸ்லீம்-எதிர்ப்பு பிரச்சாரங்களை தவிர்க்காது அலட்சியம் செய்கிறது. "

"2003 ல் இதே போன்ற செயல்களுக்காக கைது செய்யப்பட ஒரு பௌத்த துறவி பின்னர் விடுதலை செய்யப்பட்டார் . சில மாதங்களாக 'மியான்மரில் இருந்து முஸ்லிம்கள் துடைத்தெறியும்' பிரச்சாரங்களை செய்தார். ஆனால் அரசு இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அது மெய்க்டிலா வன்முறையாக ஆனது ."

"இக் கும்பல் முஸ்லீம் வீடுகளை அழிக்கும், எரிக்கும் போது பாதுகாப்பு படைகள் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர் என்பது மிகவும் தெளிவானது. 'மியான்மரில் இருந்து முஸ்லிம்கள் துடைத்தெறியும்' இச்செயல் சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் நடக்கிறது. இது இனவாத மோதல்கள் அல்ல; இந்தச் சமர் இரு பக்கமும் நடை பெறவில்லை. கொல்லப்பட்ட மற்றும் இடம்பெயர்தவர்களுள் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களென BROUK தலைவர் U Tun Khin கூறினார் .

"நாங்கள், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாக மற்றும் சுதந்திரமாக தங்களது கிராமங்களுக்கு திரும்புவதை உறுதி செய்ய ஜனாதிபதி Thein Sein அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள், பர்மாவில் முஸ்லீம்-எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் இனவெறியாட்டங்களை நிறுத்த பர்மிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம். "

மெய்க்டிலா குடியிருப்பு புத்த ஜோடி ஒன்று ஒரு முஸ்லீம் தங்க கடையில் சில போலித் தங்கங்களை விற்க முயற்சி செய்து கடைக்காரரை அச்சுறுத்தியும் துஷ்பிரயோகம் செய்யவும் ஆரம்பித்தனர். இது மார்ச் 20, 2013 அன்று 10மணிக்கு நடை பெற்றது. இது நடைபெற்று அரை மணி நேரத்தில் ஒரு கூட்டம் கூடி கடையை கற்களால் தாக்கத் தொடங்கியது பின்னர் கடை நிர்மூலமாக்கப் பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு பெரிய கூட்டத்தை நகரத்தை நோக்கி வந்து, அறிக்கை படி முஸ்லிம்கள் சொத்துக்களை அழித்தும், கடைகள், மசூதிகள் மற்றும் வீடுகளை எரிக்கவும் செய்தனர்.

தவிர, "பத்திரிகையாளர்கள் மெய்க்டிலா வன்முறை சம்பந்தப்பட்ட படங்களை அழிக்கவில்லை என்றால் கொல்வதாக இளம் துறவிகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அத்துடன் எமது கேமராக்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டன. வாக்களித்த பிறகு, அவர்கள் நம் கேமராக்களை திருப்பித் தந்தனர். மெய்க்டிலாவில் முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக அவர்களின் இலக்கு பத்திரிகையாளர்கள். இது மற்றைய நகரங்களுக்குப் பரவினால் வன்முறை அல்ல அதை விடப் பெரிதாக வாய்ப்புண்டு." என மெய்க்டிலாவிலிருந்து 7 நாட்களில் திரும்பிய ஒரு பத்திரிகையாளர் கூறினார்.

http://www.youtube.com/watch?v=cKA4KC0jMJ0 


(நன்றி Jaffna Muslim)

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts