பொது
பல சேனா அமைப்புக்கு நிதி சேகரிக்கும் விதமாக புதிய நிதி மார்க்கமொன்று
இன்று பாணந்துறையில் நடைபெற்ற அவ்வமைப்பின் பொதுக்கூட்டத்தில்
பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
மொபிடெல் தொலை பேசி வலையமைப்பினூடாக குறித்த நிதி சேகரிப்பு நடவடிக்கையினை பொது பல சேனா திட்டமிட்டுள்ளது.
இன்று பாணந்துறையில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்தில், குறித்த
தொலைபேசி வலையமைப்பில் பொது பல சேனா வின் பாடலை அழைப்பு மணியாக தரவிறக்கம்
செய்து பொது பல சேனாவுக்கு நிதிப் பங்களிப்பு செய்யுமாறு அவ்வமைப்பின்
தேரர் ஒருவரால் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்
கூட்டத்தில் இதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த தொலைபேசி
நிறுவனத்தின் பிரதி நிதிகளும் அங்கு வருகை தந்திருந்த நிலையில், உடனடியாக
மொபிடெல் சிம் அட்டைகளை பெற்று பங்களிப்பு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு மணி தரவிறக்கம் செய்யப்படும் போது 30 ரூபாய்
அறவிடப்படுவதுடன் அத்தொகை முழுமையாகவே பொது பல சேனாவுக்கு
கையளிக்கப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
நான் பார்க்கும் உலகம்
மொபிடலும் பொது பல சேனாவின் ரிங்க் டோனும் நிருந்துகள் !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மொபிடல் பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ பாடலை அவர்களது ரிங்க் டோன்
லிஸ்டில் செர்த்து அதனால் கிடைக்கும் பணத்தை இனவாதிகளுக்கு வழங்க முடிவு
செய்துள்ளது..
எமக்கு அந்தப்பாடலில் எந்த பிரச்சினயையும் இல்லை.. ஆனால் பணம் வழங்குவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்???
மொபிடெல் பாவனையாளர்கள் அவர்களது வாடிக்கையளர் நிலையத்தை தொடர்பு கொண்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்...
பாடலில் ஒரு வித பிரச்சினயையும் இல்லை, ஆனால் ஏன் அப்பணத்தை அவர்களுக்கு வழங்குவது?
அப்படியாயின் நாமும் ஒரு பாடலை அல்லது எதாவது ஒன்றை தந்தால் எமக்கும் அவ்வாறு தருவீர்களா என்று கேளுங்கள்...
இது நிறுத்தப்படாவிடின் நாம் வேறு ஒன்றை தெரிவு செய்ய வேண்டி வரலாம் என்றும் சொல்லுங்கள்..
மொபிடல் பொது பல சேனாவின் உத்தியோகபூர்வ பாடலை அவர்களது ரிங்க் டோன் லிஸ்டில் செர்த்து அதனால் கிடைக்கும் பணத்தை இனவாதிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது..

0 கருத்துகள்: