புனித
நோன்பு மாதம் ரமழான் இந்த வருடம் ஜூலை 10 ம் திகதி புதன்கிழமை தொடங்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஐக்கிய அரபு அமீரகத்தின் எமிரேட்ஸ் 24/7
இணையம் இன்று செய்தி வெளியிடுள்ளது.
இந்த வருடத்தின் ஷாபான் மாதம்
முப்பது நாட்கள் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனவே
புனித ரமழான் ஜூலை 10 ம் திகதி தொடங்கும் எனவும் சவூதி அரேபியாவில் மிகவும்
பிரபல்யமான வானியலாளர் தெரிவித்துள்ளார்.
ஷாபான் மதத்தின் நிலவு எதிர்வரும் ஜூலை 8ம் திகதி மதியத்திபின்
மறைந்துவிடும், எனவே அதே நாள் பிறையை புனித மக்காவில் இருந்து காணமுடியாது
என ரியாத்தில் அமைந்துள்ள மன்னர் பகத் பல்கலைக்கழக வானியற் பௌதிகம்
பேராசிரியர் டொக்டர் அலி அல் ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
அதே நாள்
ஜூலை 8ம் பிறையை தொலைநோக்கிகள் மூலம் தென் அமேரிக்கா பகுதிகளில் காணக்கூடிய
சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது, எனினும் அதனை சவுதியில் காணமுடியாது.
எனவே, இன்ஷாஅல்லாஹ் ஜூலை 9ம் திகதி பிறை வெற்றுக்கண்ணுக்கு தென்படும், இது
ஷாபான் மாதத்தின் இறுதிநாள், எனவே வானவியல் கணக்குகளின் படி ஜூலை 10 ம்
திகதி புதன்கிழமை புனித ரமழான் தொடங்கும்.
0 கருத்துகள்: