தனது
கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய
பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி
நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றும்
வெளிநாட்டு புலனாய்வு சேவை ஒன்றும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரை தவிர மேலும் முக்கிய
நபர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களையும் இவர்கள் செவிமடுத்து வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு தேவையான கருவிகளை அவர்களிடம் இருப்பதாகவும்
கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனமும் விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது. (GTN)
0 கருத்துகள்: