கம்பளை நகரில் அம்பகமுவ வீதியில் ஜயரட்ண கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் முஸ்லிம் வர்த்தகர்களின் மூன்று கடைகள் எரிந்துள்ளன.
கம்பளை அமபகமுவ வீதி ஜயரட்ண மாவத்தை வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் இத்தீ
விபத்து இன்று 03.07.2013 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இங்கு
ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ உணவகத்தையடுத்துள்ள புடவை வர்த்தக நிலையம்
மற்றும் பலசரக்குக் கடை என்பவற்றுக்கும் பரவியுள்ளதாக நம்பப்டுகின்றது.
இத்தீ விபத்தினால் உணவகம் , புடவை வர்த்தக நிலையம் மற்றும் பலசரக்குக் கடை
என்பவற்றுக்கு சுமார் பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேல் சேதம்
ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பக் கட்டமாக மதிப்பிடப்படடுள்ளது.
இத்தீ விபத்தை தொடர்ந்து நகர வர்த்தகர்கள் பொது மக்கள் மற்றும் கண்டி
தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பிரதமர் டி.எம். ஜயரட்ண மற்றும் கம்பளை
நகர சபைத் தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி ஆகியோர் வந்து சேதங்களை
நேரில் வந்து பார்வையிட்டார்.
0 கருத்துகள்: