திருகோணமலை, நிலாவெளி 9ஆம் கட்டை
பிரதேசத்தில் உள்ள தமிழ் மகாவித்தியாலயத்தில் முஸ்லிம் மாணவிகள் இன்று
புதன்கிழமை காலை வழமைபோன்று தமது கலாசார மரபுடன் கூடிய சீருடையுடன்
பாடசாலைக்குச் சென்றபோது, அதிபர் இவ்வாறான சீருடைகளுடன் பாடசாலைக்கு
வரக்கூடாது என்று கூறி குறித்த மாணவிகளை வெளியேற்றிவிட்டு பாடசாலை
நுழைவாயிலையும் மூடியுள்ளார்.
இதுகுறித்து அஸாத் சாலிக்கு
அறிவிக்கப்பட்டவுடன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசன்த
புஞ்சிநிலமேயுடன் தொடர்புகொண்டு தனது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததோடு,
திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் உடனடியாகத்
தலையிட்டு குறித்த முஸ்லிம் மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க வழியமைக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து சுசன்த புஞ்சிநிலமே உடனடியாக
செயற்பட்டு, சம்பந்தப்பட்ட அதிபரோடு தொடர்பு கொண்டு அவரது செய்கையை
வன்மையாகக் கண்டித்ததுடன், முஸ்லிம் மாணவிகள் எதிர்நோக்கிய
அசளகரியத்துக்கும் தீர்வும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அஸாத் சாலியுடன் தொடர்புகொண்ட
சுசன்த புஞ்சிநிலமே, நிலைமை சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாகவும்,
சம்பந்தப்பட்ட அதிபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவரை
இடைநிறுத்துவதற்கு சிபார்சு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: