எகிப்திய
தலைநகர் கெய்ரோவிலுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைமையகத்தை அரசாங்க
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று முற்றுகையிட்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
மொகடம் பிராந்தியத்திலுள்ள மேற்படி தலைமையக
கட்டடத்துக்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை
ஜன்னல்களால் வீசிய பின் அக்கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர். அந்நாட்டின் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி அதிகாரத்துவம் பொருந்திய மேற்படி மத அமைப்பின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எகிப்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு
பின்னணியிலுள்ள எதிர்க்கட்சியினர் முர்ஸிக்கு பதவி விலகுவதற்கு நாளை
செவ்வாய்க்கிழமை அந்நாட்டு நேரப்படி மாலை 5.00 மணி வரை காலக்கெடு
விதித்துள்ளனர்.
மொஹமட் முர்ஸி பதவியை விட்டு விலகி தேர்தலொன்றை
நடத்துவதற்கு அனுமதிக்காவிட்டால் மக்களின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை
எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டு கிளர்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
எகிப்திய ஜனாதிபதியை பதவி விலகக் கோரும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மில்லியன் கணக்கானோர் பங்கேற்றனர்.
தலைநகர் கெய்ரோவிலுள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த
ஆர்ப்பாட்டமானது 2011ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இடம்பெற்ற
மாபெரும் ஆர்ப்பாட்டமாக கருதப்படுகிறது.
0 கருத்துகள்: