ஜுலை
1ம் திகதிக்கான டைம் சஞ்சிகை பிரதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில்
விமான நிலையத்தில் முடக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மியன்மாரில்
பெருகி வரும் பெளத்தவாதம் பற்றிய விபரங்களுடன் வெளிவந்துள்ள மாத இதழ்
இலங்கையிலும் தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது போன்றே தற்போது
முடக்கப்பட்டிருப்பினும், சுங்கத் திணைக்கள நிர்வாக இயக்குனர்
அனுமதியளித்தால் உரிமையாளரிடம் பொறுப்பளிக்கப்படும் என சுங்கத்திணைக்கள
பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: