மெல்போர்ன்: 43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்.
மேலும் அவுஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட. இவர் நேற்று
முன்தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது
கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.
இது குறித்து ஹூசிக் கூறுகையில்,
நான் ஒரு முஸ்லீம். எனது நம்பிக்கையை நான் வெளிப்படுத்தினேன். என்னால்
பைபிள் மீது கை வைத்து உறுதி ஏற்க முடியாது. நான் யாரோ அதுவாகவே இருக்க
விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சில துவேச ஊடகங்கள் இச்சம்பவத்தை விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: