பொத்துவில் ஊறணி பகுதியில் மலசலகூட குழிக்குள் 5 பெரிய நாகப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்னர் 6 அடி நீளமான ஒரு பெரிய நாகபாம்பு தவறுதலாக
மலசலகூட குழியினுள் விழுந்துள்ளது. அதேவேளை, அதனைத் துரத்திவந்த 4
நாகபாம்புகளும் அதே குழியில் விழுந்துள்ளன.
குறித்த நாகபாம்புகள் வெளியே வரமுடியால் 4 தினங்களாக குழியினுள்
தவித்துக்கொண்டிருந்தன. இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்ட
பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை குமண வனவிலங்கு பிரிவினர் அழைக்கப்பட்டு 5
நாகபாம்புகளையும் பிடித்துச் சென்றுள்ளனர்.
கிடைத்த
தகவல்களின்படி முதலில் ஓடிவந்து விழுந்தது பெண் நாகபாம்பு என்றும்,
பின்னால் ஓடிவந்தது ஆண் நாகபாம்புகள் எனறும் அறியக்கிடைத்துள்ளது.
பொதுமக்கள் பயத்துடனும், அச்சத்துடனும் குறித்து இடத்தில்
குழுமியிருந்தனர்.
0 கருத்துகள்: