கண்டியில்
இடம் பெற்ற மிக முக்கியமான ஒரு திருமண வைபவம் பற்றித் தெரிய வந்தது. அது
சாதாரண திருமணமல்ல. பலத்த பொலீஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் உயர் பொலீஸ்
அதிகாரிகளின் நல்வாழ்த்துக்களுடன் பொலீஸ் நாய்களுக்கு நடந்த திருமண மாகும். கண்டி அஸ்கிரிய பொலீஸ் மைதாணத்தில் ஒன்பது பொலீஸ் நாய்களின் சோடிகளுக்கு இத்திருமணம் (26.8.2013) நடத்தப்பட்டது.
பொலீஸ் நாய்களின் இனப்பெருக் விருத்தி தொடர்பான செயற்திட்டத்தின் கீழ்
இத்திருமணங்கள் இடம் பெற்றன. வெளி நாட்டில் இருந்து ஒரு பொலீஸ் நாயை இறக்கு
மதி செய்ய சுமார் எட்டு இலட்ச ரூபா செலவாகுவதனால் அதனை மீதப்படுத்தும்
வகையில் இச்செய்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பேராதனை
பல்கலைக்கழக மிருக வைத்திய பீட்தின் பூரண ஒத்துழைப்புடன் இத்திருமணங்கள்
இடம் பெற்றன. முதலாவது திருமனம் பவுண்ஸர்- பிலி சோடிகளுக்கு நடந்தன. அதனை
அடுத்து ஏனைய சோடிகளுக்கும் நடத்தி வைக்கப்பட்டன.
நாடலாவிய
ரீதியில்54 மத்திய நிலையங்களில் 236 பொலீஸ்நாய்கள் உள்ளன. இவற்றின் சேவையை
இன்னும் பரவலாக்கும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமண
வைபவத்தின் சில காட்சிகளையும் நாய் திருமணம் செய்து வைக்கப்பட்ட சில
பொலீஸ் நாய் சோடிகளையும் அவற்றுக்குப் பொறுப்பான பொலீஸ் அதிகாரிகளையும்
காணலாம்.
0 கருத்துகள்: