கொசு ஒழிப்பு மற்றும் வீட்டு பாதுகாப்பு தொடர்பாக இரண்டு பாதுகாப்பு சாதனங்களை கண்டுபிடித்து சென்னை மான்ட்பேர்டு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

அந்த பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அபிராமி, தேன்மொழி, ஒபிலியா ஆகியோர் கொசு ஒழிப்பு குறித்த கண்டுபிடிப்பு குறித்து கூறியதாவது,

தற்போதைய சூழலில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதுபோன்ற கொடிய நோய்களை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து எங்கள் வழிகாட்டு ஆசிரியர் அல்போன்ஸ் ஆலோசனையின்படி புதியதாக ஒரு கருவியை கண்டுபிடிக்க கடுமையாக உழைத்தோம். முக்கியமாக மனிதனை கொசுக்கள் கடிப்பது எதனால் என்று ஆராய்ந்தோம்நம் மூச்சுக்காற்றில் வெளிவரும் கார்பன்டை ஆக்சைடு. நமது உடலில் இருந்து வரும் ஒரு வாசனை நாம் பாக்கும் பார்வையின் வெப்பம் இவற்றின் காரணமாக கொசு நம்மை கடிப்பதற்க்கு காரணம் என்று கண்டுபிடித்தோம்.

நாம் அன்றாடம் வீட்டில் உடயோகப்படுத்தும் மூன்று திரவங்களை ஒரு குறிப்பிட்ட அளவில் சேர்த்து இந்த திரவத்தை கண்டுபிடித்துள்ளோம். மேலும் ஒரு கம்பி வலை ஒன்றை செய்துள்ளோம். அதில் மின்சாரம் பாய்ச்சப்படும். உள்ளே இருக்கும் திரவம் ஒருவிதமான வாசனை வெளியிடும்போது கொசுக்கள் 10 அடி துரத்தில் இருந்தாலும் வாசனையால் கவரப்பட்டு வலையின் மேல் அமர்ந்ததும் கொசுக்கள் இறந்துவிடும். கொசுக்கள் மட்டுமல்ல மற்ற ஈ போன்றவையும் இதில் இறந்துவிடும்.மின்சாரம் கம்பியில் இருக்கும் என்பதால் கைக்கு எட்டாத துரத்தில் இந்த கருவியை வைக்க வேண்டும். இந்த கருவியை எங்கும் எளிதாக எடுத்துசெல்லலாம். இதில் எந்தவிதமான நச்சுத்தன்மையும் இல்லை. இந்த திரவத்தின் விலை 50 மில்லி 35 ரூபாய். இதனை 60 நாட்கள் உபயோகப்படுத்தலாம். எங்கள் கருவியின் விலை ரூ 1, 500 ஒரு முறை வாங்கினால் போதுமானது. இந்த கருவியை அரசு மக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என்றனர் மாணவிகள்.

இவர்கள் எட்டடி பாய்ந்தால் இதே பள்ளியை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவிகள் சுவாதி, மேனிசா, ஏமலட்சுமி ஆகியோர் பதினாறு அடி பாய்கின்றனர்.

அவர்கள் வீட்டின் பாதுகாப்பு குறித்து தங்கள் கண்டுபிடிப்புகள் குறித்து கூறியதாவது, தற்போதைய சூழலில் வீட்டு பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அதிநவீன வீட்டு பாதுகாப்பு கருவியை கண்டுபிடித்துள்ளோம். முதலில் வீட்டில் உள்ள பீரோவில் இதனை பொருத்திவிட்டால் போதுமானது. நாம் வீட்டில் இல்லாதபோது அதன் அருகில் யார் சென்றாலும் நமக்கு உடனடியான செல்போனில் எஸ்.எம்.எஸ். வந்துவிடும். மூன்று எண்களுக்கு இதுபோன்ற தகவல்கள் வெளிவரும் வசதி செய்யப்பட்டுள்ளது.

நம்முடைய செல்போனில் இருந்து எங்கிருந்தாலும் அந்த கருவியின் இயக்கத்தை நிறுத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கமுடியும்.இதுபோல் கேஸ் அடுப்பில் இதனை பொருத்தினால் கேஸ் லீக்கேஜ் என்றாலும் இதுபோல் நமக்கு எங்கிருந்தாலும் தகவல் வரும். உடனடியான செல்போனில் இருந்து ஆப் என்று தகவல் அனுப்பினால் கேஸ் லீக் தானாக தடுக்கப்படும். மேலும் மின்சாரம் தொடர்பாக எந்த பிரச்னை என்றாலும் நமக்கு தகவல் அளிக்கும் மின்விபத்தை தடுக்கும். தீ விபத்தை தடுக்க ஏற்கனவே இந்த கருவி மூலம் தண்ணீர் குழாய்களில் இணைப்பு செய்யப்பட்டிருப்பதால் நாம் எங்கிருந்தாலும் செல்போனில் தீ விபத்தை தடுக்கும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. திருட்டை தடுக்கும் கருவி ரூ. 500 மற்றும் கேஸ் லீக் தடுக்கும் கருவி ரூ. 750 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புகள் குறித்து முறையாக காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts