எமக்கும்
தமிழ் சகோதரர்களுக்கும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம் ஒருமொழி பேசுகின்ற
நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துசுமுக உறவை ஏற்படுத்துவோம்
எங்களுக்காக குரல் கொடுத்ததற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் !!! எதிரியை நம்பலாம் !!முனாபிகீன்கலை நம்பி ஏமாந்தவர்கள் நாம் !!
முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்: நவநீதம்பிள்ளை
navaiTNA பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நவநீதம்பிள்ளைக்கு இடையில்
இன்று (30) காலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே
நவநீதம்பிள்ளையிடம் தன வலியுறுத்திய விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அத தெரண
ஊடகத்துக்கு வழங்கிய தகவல்களில்
இலங்கையில் சிறுபான்மை தேசிய
இனங்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமாயின் ஐநா மனித உரிமை அலுவலகம் ஒன்று
இலங்கையில் திறக்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தியுள்ளோம்.” என்று
சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
அவர் தெரிவித்த தகவல்கள்
மத்தியில் குறித்த ஊடகம் முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து
நவநீதம்பிள்ளையிடம் பேசப்பட்டதா என சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேள்வி
எழுப்பியது.
அதற்கு பதிலளித்த அவர், ” ஆம் முஸ்லிம் மக்களின்
பிரச்சினை குறித்து நவநீதம்பிள்ளைக்கு எடுத்துரைத்தோம். பள்ளிவாசல்கள்
உடைக்கப்பட்டமை, கோயில்கள் உடைக்கப்பட்டமை, தேவாலயங்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டமை, பர்தா உடை பிரச்சினை போன்றவை தொடர்பில் விளக்கமளித்தோம்.
அதற்கு பதிலளித்த நவநீதம்பிள்ளை, ´முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து
நீங்கள் என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுடைய
பிரச்சினையை பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில் நீங்கள் முன்வந்துள்ளமையை
நான் பாராட்டுகிறேன்´ என்று கூறினார்.” என்று சுரேஸ் பிரேமச்சந்திர
தெரிவித்துள்ளார் .
மலையக மக்கள் குறித்து நவநீதம் பிள்ளையிடம்
பேசப்பட்டதா என சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் வினவியபோது, “மலையக மக்கள்
குறித்து பேசப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார் .
இதேவேளை,
வடமாகாணத்தில் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய
மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பால் முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு
தொடரான தடைகள், இடையூறுகள் போடப்பட்டு வருவதாக முஸ்லிம் தரப்பில் பலமான
குற்றச்சாட்டுக்களை முன்வைக்கப் பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
0 கருத்துகள்: