சிறுவர்களுக்கு அன்பு காட்டாதோரும் பெரியோருக்கு மரியாதை செய்யாதவர்களும் என்னைச் சார்ந்தவர்களல்ல என்று முஹம்மது நபி அவர்களின் வாக்கை நினைவு படுத்தியவான இக் குறிப்பை எழுதுகிறேன்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை பாடசாலை வீதியில் விஷேட தேவையுடைய மீறாலெப்பை முஹம்மட் ஹிமாஸ் என்ற சிறுவன்

(வயது – 11) கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மனச்சாட்சியுள்ள எவரும் ஜீரணிக்க முடியாது.

கடந்த 17.08.2013ம் திகதி காணமல் போன சிறுவனைத் தேடி அவர்களது குடும்பத்தினர் அவரின் புகைப்படத்தை 'போட்டோ கொப்பி' எடுத்து கல்குடா முஸ்லீம் பிரதேசம் முழுவதும் ஒவ்வொரு வீடாகச் சென்று இந்தச் சிறுவனை யாராவது கண்டயா கண்டால் இலக்கத்திற்கு தெரியப்படுத்துங்கள் என்று ஒரு தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துச் சென்றார்கள் சிறுவனைத் தேடித்திரிந்த போது அவர்கள் அழுத அழுகையைப் பார்க்கும் போது எனக்கும் அழுகை வந்துவிடும் போல் இருந்தது.

இதே நேரம் 22.08.2013ம் திகதி பிற்பகல் 03.00 மணியளவில் ஓட்டமாவடி மடுவத்து வீதியில் சிறுவன் ஒருவனை அடித்து கொலை செய்து போட்டுள்ளார்கள் என்ற கதை பிரதேசம் முழுவதும் பரவியது இதைக் கேட்டு அவ்விடத்திற்கு நானும் சென்றிருந்தேன்.

சிறுவனின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு அவரின் முகத்திலும் தலையிலும் கற்கலால் அடித்து கொலை செய்து மதில் ஓரமாக போட்டு அதன் மேல் சீமந்து கற்களை பரவி வைக்கப்பட்டிருந்தது.

இச் சிறுவன் காணாமல் போன தினம் பிற்பகல் அவரது முன் வீட்டைச் சேர்ந்த சாகுல் ஹமீட் அலி அக்பர் (வயது – 21) என்பவர் துவிச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதை நேரில் கண்டவர்கள் மரணமடைந்த சிறுவனின் உறவினர்களிடம் தெரிவித்தற்கிணங்க உறவினர்களால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சாகுல் ஹமீட் அலி அக்பர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார்.

இச் சம்பவம் தொடர்பாக மரணமடைந்த சிறுவனின் மாமியான ஏ.எல்.ஜீனத் உம்மா என்பவரிடம் கேட்ட போது,

அவர் எனது நானாவின் மகனாக இருந்தாலும் அவரை வளர்த்தது நான்தான் தண்ணீர் தேவையென்றாலும் என்னிடம்தான் ஓடி வந்து தண்ணிதாங்க மாமி என்று வாங்கிக் குடிப்பார் மன வளர்ச்சி குறைந்தவராக இருந்தாலும் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி வரச் சொல்லி யார் சொன்னாலும் ஏலாது என்று கூறாமல் சென்று வாங்கிக் கொடுப்பார். அமைதியான சுபாவம் கொண்ட என்ட பிள்ளைய இப்படி கல் நெஞ்சம் படைத்தவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டார்கள் அவர்கள் நல்லாவே இருக்க மாட்டார்கள் இறைவன் அவர்களுக்குறிய தண்டனையை மிக விறைவில் கொடுப்பான்.

நான் தூக்கி வளர்த்த பிள்ளையை கடைசி நேரத்தில் அவரது முகத்தைக் கூட பார்க்க ஏலாத அளவுக்கு கொலை காரர்கள் செய்து விட்டார்கள் இச் செயலைச் செய்த கொலைகாரன் சட்டத்தின் முன் நிருத்தப்பட்டு அவனுக்கான தண்டனை வளங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மரணமடைந்த சிறுவனின் தந்தையான முஹம்மது உசனார் மீராலெப்பை கருத்துத் தெரிவிக்கையில். நான் பொலநறுவை கதுருவலயில் ஹோட்டல் ஒன்றில் கடமைபுரிகின்றேன் எனக்கான மாதாந்த லீவில் ஊருக்கு வந்திருந்த காலத்தில்தான் இச் சம்பவம் நடைபெற்றது. எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒன்று ஆண் மற்றயது பெண் எனது மூத்த மகன்தான் மரணமடைந்தவராவார் இவர் விஷேட தேவையுடையவர் அதனால் அதற்காக காத்த முனையில் உள்ள பாடசாலையில் படித்து வந்தார்.

சனிக்கிழமை மதியச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு பின்நேரத் தூக்கம் தூங்கச் செல்லும் போது எனது மகன் வீட்டுக்கு முன்னாள் விளையாடிக் கொண்டிருந்தார் 3.00 மணி அல்லது 3.30 மணியளவில் எழும்பி மகனைப் பார்த்தேன் மகனைக் காணவில்லை மனைவியிடம் மகன் எங்கே என்று கேட்டேன் பக்கத்துள ராத்தாட்ட இருப்பான் என்று சொன்னா அங்கு சென்று பார்த்தேன் அங்கு வரவில்லையென்று சொன்னார்கள் அதன் பின் எனது தங்கச்சிமார்ர வீட்ட போய் தேடினேன் அங்கும் இல்லை என்றதும் அன்றில் இருந்து மையத்துக் கிடைக்கும் மட்டும் தேடித்தான் திரிந்தோம்.

என்ட பிள்ளையின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு முகத்தில் கற்களால் அடித்துத்தான் கொலை செய்திருந்தார்கள் நான் போய்ப் பார்த்த உடன் எனது மகன் போட்டிருந்த உடுப்பை வைத்துத்தான் அடையாளம் கண்டு கொண்டேன். தற்போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அலி அக்பர்தான் என்ட மகன கடைசியாக சைக்கிள்ள ஏத்திக்கிட்டுப் போயிருக்காரு அத பலரும் கண்டு இருக்காங்க அவர்தான் செய்திருந்தாலும் என்ட மகன கொலை செய்ற அளவுக்கு அவருக்கு ஏன் மனசு வந்திச்சு என்றுதான் எனக்கு விளங்கள என்று தெரிவித்தார்.

அச் சிறுவன் கல்வி கற்ற காவத்தமுனை விஷட தேவையுடைய காப்பகத்தின் ஸ்தாபகர் எம்.பி.எம்.சித்தீக் கருத்துத் தெரிவிக்கையில்., மரணமடைந்த ஹிமாஸ் என்ற சிறுவன் விஷேட தேவையுடைய எங்களது பாடசாலையில் 2009ம் ஆண்டு தொடக்கம் கற்று வருகின்றார். எங்களது பாடசாலை சிறுவனுக்கு இவ்வாறு நடந்ததையிட்டு மிகவும் கவலைப்படுகின்றேன். பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் யாருடன் பழகுகின்றார்கள் எங்கு பிரத்தியோக வகுப்புக்களுக்குச் செல்கின்றார்கள் என்று பெற்றோர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும். இதே போன்று சமுக தொன்டு நிறுவனங்களும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் விடயத்தில் பெற்றோருக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இச் சிறுவனின் கொலை தொடர்பில் நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது என்ன வென்றால் சிறுவனை துஸ்பிரயோகத்தில் பயன் படுத்திவிட்டு மீண்டும் ஒரு முறை அழைத்த போது சிறுவன் மறுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து சிறுவன் ஆற்றோரத்தில் இருந்து சுரிமண்ணை அள்ளி சந்தேக நபர் மீது வீசியதாகவும் சந்தேக நபர் கல்லால் எரிந்த போது சிறுவனின் உயிர் பிறிந்து விட்டதாக சந்தேக நபர் தெரிவித்தாக அறிய முடிகின்றது.





0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts