இவ் வருடம் ஹஜ் செல்வதற்காக முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தில் விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் கட்டண விடயத்தில் அதிருப்தியுற்று தம்மால் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள முடியாது என அறிவித்து இம்முறை ஹஜ்ஜூ செல்வதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

இம்முறை சில ஹஜ் முகவர்கள் 5 ½ இலட்சம் தொடக்கம் 7 இலட்சம் ருபா வரை ஹாஜிகளிடம் அறவிட்டு வருகின்றமையாலேயே ஹாஜிகள் தமது விண்ணப்பங்களை இரத்துச் செய்துவருகின்றனர்.

கடந்த ஆண்டின் ஒக்டோபர் மாத்தில் இருந்தே ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும் என்ற நிய்யத்தை வைத்து கொழும்புக்கு வந்து தமது கடவுச் சீட்டையும் கையில் எடுத்துக்கொண்டு முஸ்லிம் சமயத் திணைக்களத்திற்குச் சென்று தமது விண்ணப்பத்தை சமர்ப்பித்து தமக்கென ஒரு பதிவு இலக்கத்தையும் பெற்றுக்கொண்ட ஏழை எளிய மக்கள் தாமும் இம்முறை ஹஜ்ஜூக்குச் செல்ல வேண்டும்.

என நிய்யத்து வைத்து அதற்காக தமது நகைகளையும் விற்று, அல்லது ஓய்வுபெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் தமக்கு கிடைத்த ஓய்வுதிய மொத்தப்பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு காத்திருந்தனர். மேலும் இப்பட்டியலில் சில அரசாங்க வங்கி உத்தியோகத்தர்களும் உள்ளனர்.

வேறு சிலர் தமது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குச் அனுப்பி தமது பெற்றோரை அல்லது குடும்ப உறவினர்களை இம்முறை ஹஜ் செய்வதற்காக சிறுகச் சிறுக பணம் சம்பாதித்து அதனை சேகரித்து பெற்றேர்களை தயார் படுத்தி பதிவு செய்தவர்களும் அடங்குகின்றனர். இவ் வகையானவர்களே இம் முறை ஹஜ் செய்வதற்கு பின்வாங்கியுள்ளனர்.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் பணம் படைத்தவர்கள் 6 – 7 இலட்சமும் கொடுத்து ஹஜ் செய்வதற்கு தயாராக உள்ளனர். அதற்காக அவர்கள் ஹஜ் முகவர்கள் கேட்கும் மொத்த தொகையும் செலுத்துகின்றனர். ஆனால் நடுத்தர வசதி படைத்தவர்களுக்கு இப் பெரிய தொகையை செலுத்தி ஹஜ் செய்ய முடியாமல் உள்ளனர்.

இம் முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு ஒருவரிடம் 4 இலட்சம் ருபாவை மாத்திரமே அறவிட வேண்டுமென ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி அறிவித்துள்ளார். இத் தொகைக்கு மேலதிகமாக அறவிடும் ஹஜ் முகவர்கள் பற்றி தனக்கு முறையிட்டால் அவர்களது ஹஜ் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய முடியும் எனவும் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பௌசி தெரிவித்திருந்தார்.

மேலும் அமைச்சர் பௌசி தெரிவிக்கையில் – கடந்த வருடம் புனித மக்காவுக்கு 30 இலட்சம் பேர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். ஆனால் தற்போது புனித கஃபத்துலாவில் நிர்மாண வேலைகள் நடைபெறுகின்ற காரணத்தினால் இந்த வருடம் ஹஜ் யாத்திரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இதன் படி சவுதி அரேபியாவிலுள்ள யாத்திரிகளின் எண்ணிக்கை 50 வீதத்தினாலும் வெளிநாட்டு யாத்திரிகளின் எண்ணிக்கை 20 வீதத்தினாலும் அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது. இதனால் இம்முறை 15 இலட்சம் பேர்களே ஹஜ் கடமைக்காக வருவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறைந்த யாத்திரிகள் ஹஜ் கடமைக்காக வரும் காரணத்தினால் மக்கா மற்றும் மதீனாவில் போட்டித் தண்மை குறைந்து செலவுகள் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனாலேயே இலங்கையில் இருந்து ஒரு யாத்திரிகரிடம் 4 இலட்சம் ருபா அறவிட தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதை விட யாராவது கூடுதலாக அறவிடுவார்ககளாக இருந்தால் அதற்கான விசேட காரணங்கள் மற்றும் விசேட வசதிகளை எழுத்து முலம் அறிவிக்க வேண்டும். இதை விடுத்து 4 இலட்சம் ருபாவை விடு கூடுதலாக அறவிடும் முகவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பௌசி தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து 2240 பேருக்கு மட்டுமே ஹஜ் செல்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம் முறை ஹஜ் செல்வதற்கு 7000 பேர் முஸ்லீம் சமய திணைக்களத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் முதலில் 2800 பேருக்கு நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. அதில் 1750 தயாராக இருப்பதாக தெரிவித்தனர் மேலும் 2801 – 4000 பேர் வரையிலான விண்ணப்பதாரிகளை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து 2100 பேரை ஹஜ் பயணத்திற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் இம்முறை ஹஜ் செல்வதற்கு நிய்யத்து வைத்த 2000 பேர் ஏன் பின்வாங்கினார்கள் என்பதனை ஆராய்ந்து அரசாங்கம் மீள்பரிசீலனை செய்தல் வேண்டும். இவ் ஆண்டு 91 ஹஜ் முகவர்களுக்கும் 2240 ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த வருடத்திலும் பார்க்க இம்முறை ஹஜ் கோட்டா பகிர்வில் முறைகேடுகள் இடம்பெற்றதாக 41 முகவர்கள் செரண்டிப் ஹஜ் முகவர்கள் என பெயரிட்டு ஒரு சங்கமாக இயங்குகின்றனர். அதின் தலைவராக ஹாஜி எம்.எஸ்.எச் முஹம்மத் செயல்படுகின்றார்.

முஹமத் கருத்து தெரிவிக்கையில் எனக்கு ஹஜ் நேர்முகத் தேர்வில் 66 புள்ளிகள் வழங்கப்பட்டன. 25 ஹஜ் கோட்டா மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் இக்ரா ரவல்ஸ_க்கும் 66 புள்ளிகள் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட் கோட்டா 55 ஆகும். சேப்வே ரவல்ஸ_க்கு 80, ஹாரா ரவல்ஸ் 80 இப்படியாக தமக்கு தேவைப்பட்டோர்களுக்கு கூடுதலாகவும் வேண்டப்படாதவர்களுக்கு குறைந்த கோட்டாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த வருடம் நீதிமன்றத்தை நாடி நியாயம் கோரி அல்லது கடந்த ஆண்டின் உயர் நீதிமன்ற தீர்ப்புப் படி (கிரைற்றீரியா) முறைப்படி புள்ளிகள் வழங்கி அவர்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் கோட்டாவை பகிர்ந்தளிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. அம் முறை பின்பற்றப்படவில்லை அதனாலேயே இம்முறையும் நீதிமன்றத்தை நாடினோம். ஆனால் இம்முறை நியாயம் கோரி செய்யப்பட்ட வழங்குத்தாக்கலில் உயர் நீதிமன்றம் எமது மனுவை பரிசீலித்து 2014இல் ஹஜ் கோட்டா நியாயமுறையில் பகிரப்பட வேண்டும். அத்துடன் நேரகாலத்துடனே மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் ஹஜ் ஏற்பாட்டுக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த 2240 ஹஜ் கோட்டாவை நியயமான முறையில் 41 முகவர்களுக்கும் பகிர்ந்தளித்தால் சிறிய இலாபத்துடன் 3 இலட்சத்து 50 ஆயிரம் ருபாவுக்கு அழைத்துச் செல்ல எமது சங்கம் தயாராக இருப்பதாக என்.எம் ரவல்ஸ் தலைவர் முஹம்மத் தெரிவித்தார்.

எனவே தான் எமது ஹஜ் முகவர்கள் சங்கங்கள்; இணைந்து ஐனாதிபதியை சந்தித்து இவ்விடயத்தினை அவரது கவணத்திற்கு கொண்டுவருவதற்காக அவருக்கு கடிதம் எழுதி அவரது அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் முகம்மத் தெரிவித்தார்.

ஐனாதிபதிக்கு ஹஜ் கோட்டா பகிர்வில் இடம்பெற்றிருக்கும் முறைகேடுகள், மற்றும் நியயத்தை அவருக்கு தெரிவித்து 2240 ஹாஜிகளும் 3இலட்சத்து 50 ஆயிரம் ருபா கட்டணத்தை அறவிட்டு ஹாஜிகளது நிய்யத்தை பூரணப்படுத்த முடியும். எனவும் செரண்டிப் தலைவர் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts