
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.வேலாயுதம் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
மன்னர் ஆட்சியின் போது கோமாளிகள் இருப்பது போல இந்த அரசாங்கத்திலும் அமைச்சரவை கோமாளி ஒருவர் இருப்பதாகவும் அது மேர்வின் சில்வா எனவும் வேலாயுதம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவநீதம்பிள்ளையை திருமணம் முடிக்க விருப்பம் என்று கூறியதன் மூலம் மேர்வின் சில்வா சர்வதேசத்தில் இலங்கைக்கு அவப்பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக வேலாயுதம் தெரிவித்தார்.
எனவே அரசாங்கம் இவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கே.வேலாயுதம் தெரிவித்த மேலதிக கருத்துக்களை மேலுள்ள காணொளியில் காண்க...
இதேவேளை, அமைச்சர் மேர்வின் சில்வா நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் என அறிவித்தமைக்கு சர்வதேச ரீதியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஈழத்தில் தமிழ் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதன் பிரதிபளிப்பே அமைச்சர் மேவின் சில்வாவின் கருத்து என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
(அத தெரண - தமிழ்)
0 கருத்துகள்: