சீனாவில் விபத்து நடந்த போது சிரித்துக் கொண்டிருந்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் உள்ள யானான் என்ற இடத்தில் கடந்தாண்டு நடந்த விபத்தின் போது 36 பயணிகள் உயிரிழந்தனர்.
அப்போது குறித்த மாகாணத்தின் பணி பாதுகாப்புப் பிரிவின் தலைவராகப்
பணியாற்றி வந்த யங் டகாய்(வயது 55) என்ற அதிகாரி, சம்பவம் நடந்த இடத்தைப்
பார்வையிடச் சென்றார்.
அங்கு பணியாளர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, சிரிப்பது போன்ற புகைப்படம் மறுநாள் பத்திரிக்கைகளில் வெளியானது.
இது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் இவர் விதவிதமான
கைக்கடிகாரங்கள் அணிந்திருக்கும் புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. இவை அதிக விலையுடையவை அல்ல என்றும், தன்னுடைய சம்பளத்தில் வாங்கப்பட்டவைதான் என்றும் டகாய் விளக்கம் அளித்தார்.
இருப்பினும், அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் மீது ஊழல்
குற்றம் சுமத்திய அரசு, கடந்த பிப்ரவரி மாதம் அவரைக் கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்தும் நீக்கியது. இந்நிலையில் இவர் மீதான வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே இணையதள உபயோகிப்பாளர்கள் இதன்மூலம் அதிக வதந்திகளை பரப்பக்கூடும் என்ற கவலை அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.
0 கருத்துகள்: