கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் தனித் தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கண்டி தீக்குளிப்பு சம்பவம் நடைபெற்றதையடுத்து குற்றப்புலனாய்வுக் குழுவொன்று நேற்று கண்டிக்கு சென்று தீக்குளிப்பு சம்பவத்தை படம்பிடித்த ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்றது.
இது தவிர தகவல் ஊடகத்துறை அமைச்சும் ஊடகவியலாளர்களின் சமூக பொறுப்பு குறித்து தனியான விசாரணையை மேற்கொள்வதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
பசுவதை மற்றும் மதமாற்றம் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெளத்த பிக்கு கடந்த வெள்ளியன்று தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக செய்தி திரட்ட பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தலதா மாளிகைக்கு சென்றிருந்தன. குறித்த பிக்கு தனக்குத் தானே தீ மூட்டிக்கொள்வதை படம் பிடித்த கண்டி பிரதேச ஊடகவியலாளர் ஒருவரும் நேற்று கண்டி பொலிஸாரினால் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இவர் திடீர் மரண பரிசோதகர் முன் ஆஜர் செய்யப்பட்டார்.
பிக்கு தீக்குளிப்பதை தடுக்காது செய்தி திரட்டுவதற்கு மட்டும் முன்னுரிமை வழங்கியது குறித்து திடீர் மரண விசாரணை அதிகாரி ஊடகவியலாளரிடம் விசாரணை செய்தார். ஊடகவியலாளர்கள் தமது சமூக பொறுப்பை சரிவர செய்யாதது குறித்தும் அவர் வினா எழுப்பியுள்ளார். மேலும் பல ஊடகவியலாளர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட உள்ளனர் என்றும் தெரியவருகிறது.

0 கருத்துகள்: