உலகப்
புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது
தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பெளத்தர்களின் புனித
பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர
ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உயிர்த் தியாகம் செய்த இந்திர ரத்ன தேரர் ஜனாதிபதிக்கு தனது கையெழுத்தில் எழுதிய கடிதம் என ஊடகவியலாளர்களிடம் ஹெல உறுமய கையளித்த கடிதப் பிரதிகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
சமாதானத்தின் ஒளிக்கீற்றுக்கள் மனிதனுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இலங்கையில் 5000 மாடுகளின் ரத்தத்தால் இப்பூமி நனைகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இது தொடர்பாக நான் உங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
அதன் பின்னர் பத்து இலட்சம் கையெழுத்துகளுடனான மகஜர் ஒன்றையும் கையளித்தேன். அத்தோடு எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் வரை பாதயாத்திரையாக வந்து ஜயஸ்ரீ மகா போதியில் ஆசீர்வாதப் பூஜை நடத்தினேன்.
ஆனால் எனது எந்தவொரு முயற்சிக்கும் பதில் கிடைக்கவில்லை. எனவே எனது உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்தேன்.
கீழ்க்கண்ட உங்களின் கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.
மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும். பலாத்காரமாக மதம் மாற்றுவதற்கு எதிரான பிரேரணை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், பெளத்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பெளத்தத்தை ஒழிக்கும் சர்வமத அமைப்புகள் ஒழிய வேண்டும். பெளத்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே தலதா மாளிகையின் முன்னால் நான் முன் வைக்கும் பிரார்த்தனையாகும் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உயிர்த் தியாகம் செய்த இந்திர ரத்ன தேரர் ஜனாதிபதிக்கு தனது கையெழுத்தில் எழுதிய கடிதம் என ஊடகவியலாளர்களிடம் ஹெல உறுமய கையளித்த கடிதப் பிரதிகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது

0 கருத்துகள்: