மியன்மாரின்
ஷான் மாநிலத்தில் லாஷியோ எனும் நகரில் அமைந்துள்ள மாபெரும் இஸ்லாமிய
நிலையம் மீது பௌத்த தீவிரவாத கும்பல் இரவு எட்டு மனியளவில தாக்குதல்
நடத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த இஸ்லாமிய நிலையத்தில் பள்ளிவாயல் ஒன்றும் மற்றுமோர் அநாதை இல்லமும் இயங்கி வருகிறது. அதில் அநாதரவான வறுமை கோட்டில் வாடும் 200 க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறார்கள் தங்கி கல்வி கற்று வருவதாக தெரிய வருகிறது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்ப்பில் மேலும் தெரிய வருவதாவது, ரோஹிங்கிய செய்தி நிறுவனத்துக்கு தகவல் வழங்கிய நம்பத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் அடிப்படையில், குறித்த நகரத்தில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவர் பௌத்த பெண்மணியை தாக்கியுள்ளார்.
அந்த தாக்குதலில் பாதிக்கப் பட்ட பெண்ணை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்போது மேற்படி தாக்குதலை நடாத்தியவர் முஸ்லிம் ஒருவரே என கருதிய பௌத்த தீவிரவாத கும்பல் ஒன்று திடீரென குறித்த இஸ்லாமிய நிலையத்தை முற்றுகையிட்டு அங்கு அமைந்துள்ள பள்ளிவாயல்,அநாதை இல்லம் உட்பட அனைத்தையும் தீமூட்டி சேதப் படுத்தியுள்ளனர்.
மேலும் தீயணைப்பு படையினர் தமது பொறுப்பை துஷ்பிரயோகம் செய்துஉடன் விரைந்து தீயை அணைக்கத் தவறியுள்ளதாகவும் ரோஹிங்கிய செய்தி நிறுவனத்துக்கு தகவல் வழங்கிய பிரஸ்தாப வட்டாரங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
லஷியோ நகரில் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருவதோடு, பல மஸ்ஜித்கள் உட்பட பல இஸ்லாமிய நிலையங்களும் இயங்கி வரும் நிலையில் அங்கு பதற்ற நிலை காணப் படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: