போலியாக அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் தொடர்பில் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற் படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
கள்ள நோடுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், புழக்கத்துக்கு விடுதல் தொடர்பில் தகவல்கள் தெரிந் தவர்கள் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கோ, அருகிலுள்ள
பொலிஸ் நிலையங்களுக்கோ தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமை யகம் வேண்டுகோள் விடுக்கிறது.
கடந்த சில தினங்களாக யடியந்தோட்டை, செவன கல, கொஸ்கொட உட்பட நாட்டின் சில பிரதேசங் களில் போலி ரூபா நோட் டுக்கள் வைத்திருந்த பல சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போலியாக அச்சிடப்பட்ட 500 ரூபா, 1000 ரூபா மற்றும் 2000 ரூபா உள்ள நோட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்கள் மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு தகவல்களின் அடிப்படையில் உள்ள நோட்டுக்கள் அச்சிடும் இடங்கள் பலவற்றை முற்றுகையிட்டுள்ள பொலிஸார், அங்கிருந்து பல்வேறு இயந்திரங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
இந்நிலையிலேயே கள்ள நோட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் பொலிஸ் தலைமையகம் அந்த கள்ள நோட்டுக்களை அடையாளம் காண்பதற்கான சில முக்கிய குறிப்புக்களை தந்துள்ளது.
1) ரூபா நோட்டில் காணப்படும் நீர் அடையாளம் (Water Mark) உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
2) நோட்டின் குறுக்காக காணப்படும் பாதுகாப்பு நூல் அடையாளம் உரிய முறையில் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும்.
3) கள்ள நோட்டு உண்மையான நோட்டை விட தடிப்பானதாக காணப்படும். சில நோட்டுக்களில் இரண்டு தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
4) கள்ள நோட்டின் நிறங்கள் உண்மையான நோட்டை விட மாறுபட்டதாக காணப்படும் இதனை உரிய முறையில் அவதானிக்க முடியும்.
5) ரூபா நோட்டுக்கள் பலவற்றை கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு நடுவில் போலி நோட்டுக்களும் இருக்கலாம்.
போலி நோட்டுக்களை உங்களிடம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும் என்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது

0 கருத்துகள்: