மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதை தடை செய்ய வேண்டும் என கூறும் பௌத்த தேரர்கள் அநியாயமாக வேட்டையாடப்படும் ஏனைய உயிரினங்கள் விடயத்தில் அக்கறை கொள்ளாமை ஏன் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினர்.
முஸ்லிம் மக்கள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இக்கேள்வியை எழுப்பினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
மாடு அறுப்பது என்பது ஒரு ஜீவராசியின் உயிரைப்பறிப்பது என்ற அடிப்படையில் அதனை தடை செய்ய வேண்டும் என சகோதர பௌத்த தேரர்கள் கோரிக்கை விடுத்தால் அது பற்றி அக்கறையுடன் சிந்திக்கலாம். ஆனால் சிங்கள பௌத்தர்களின் கோரிக்கைகள் அவ்வாறு இருப்பதாக தெரியவில்லை. 
உண்மையில் உயிரினம் எனும் போது கோழி, மற்றும் மீன் வகைகளும் அதற்பகுள் அடங்கும். இந்த நாட்டில் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகளை விட பல மடங்கு அதிகமாக மீன்களும் கோழிகளும் வேட்டையாடப்படுகின்றன. மாட்டின் உயிர் மட்டும்தான் உயிர் மீனின் உயிர் உயிரில்லை என பௌத்த மதம் ஓர வஞ்சகமாக சொல்கிறதா?
அதே போல் ஏராளமான பன்றிகள் தினமும் கொல்லப்படுவதையும் காண்கிறோம். இவை அனைத்துக்கும் மேலாக 83ம் ஆண்டிலும் அதற்குப்பின்னரும் எந்தக்குற்றமும் செய்யாத மனிதர்கள் - பொது மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள். இத்தகைய கொலைகளுக்கெதிராக ஒரு பௌத்த பிக்குவும் தீ மூட்டிக்கொள்ளவில்லை. ஆக மாடு அறுக்கக் கூடாது என்பது மாட்டின் மீது கொண்ட இரக்கத்தினால் இல்லை மாறாக  அதனை வியாபாரம் செய்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்ற இனத்துவேசம் காரணமகவே இக்கோரிக்கi முன்வைக்கப்படுகிறது.
உயிர்கள் மீது காருண்யம் கொண்டவர்களாக பௌத்த தேரர்கள் இருப்பார்களாயின் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கில் கொல்லப்படும் மீன் பிடித்தலையும் தடைசெய்ய வேண்டும். அதனை சொல்வதற்கு இவர்கள் தயாரில்லை. காரணம் மீனவர்களில் 70 வீதமானோர் சிங்கள மக்களாகவும் 100 வீத சிங்கள மக்கள் மீனையே பிரதான உணவாகவும் கொள்கின்றனர். கருவாடு இல்லாத உணவை சிங்கள மக்களிடம் காணவே முடியாது. 
இவ்வாறு மீனின் உயிரை கொல்வதும் தடை செய்யப்பட வேண்டும் என கோரினால் சிங்கள மக்களே இவர்களுக்கெதிராக கிளர்ந்தெழுவார்கள் என்ற காரணத்தினாலேயே மாட்டின் உயிருக்கு மட்டும் மதிப்பளித்து விட்டு மீனின் உயிரை துட்சமாக நினைப்பதை  பௌத்த சமய தலைவர்களிடம் காணுவது கவலையானது. 
இஸ்லாம் எந்தவொரு உயிரையும் அநியாயமாக பறிப்பதை தடை செய்கிறது. நாய் வளர்ப்பது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்ட போதும் வீதியில் உலாவும் நாயை துன்புறுத்த எவருக்கும் அனுமதியில்லை. தெருவில் தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியதற்காக ஒரு விபச்சாரி சொர்க்கம் போனாள் என இஸ்லாம் சான்று பகர்கிறது. பன்றி சாப்பிடுவதும் அனுமதிக்கப்படாத போதும் பன்றியை கொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts