காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு தயார் என அறிவித்துள்ளது.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் பகிரங்க கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதமொன்றை அனுப்பி வைதுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 17 ஆம் திகதி காத்தான்குடி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது இவ்வூரில் அபிவிருத்தி மற்றும் அரசியலோடு தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மூன்று மாத காலத்திற்கொரு தடவை எம்மோடு கலந்துரையாடுவதற்குத் தயாராக இருப்பதாக பகிரங்கமாகத் தெரிவித்திருந்தீர்கள். அதனை ஊடகங்கள் பலவும் உறுதிப்படுத்தி செய்திகள் வெளியிட்டிருந்தன. அது தொடர்பாகவே இக்கடிதத்தினை நாம் எழுதுகின்றோம்.

அரசியல் என்பது நூறு வீதம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஏனைய விவகாரங்களும் எவ்வாறு கையாளப்படல் வேண்டும் என்ற விடயங்களை நாம் மிகத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் கூறி வந்திருக்கின்றோம்.

மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் பொதுமக்களின் பணம் அரசியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் சுரண்டப்படுவதனையும் இதன் காரணமாக தரமற்ற நீடித்து நிலைக்காத அபிவிருத்திகள் மக்களின் தலையில் திணிக்கப்பட்டு வருகின்ற சம்பவங்களையும் நாம் மிகவும் தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் சுட்டிக்காட்டித் தெரிவித்து வந்திருக்கின்றோம்.

அத்தோடு இவ்வூரின் அபிவிருத்திகள் எவ்வாறு சிறந்த முறையில் மேற்கொள்ளபப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளையும் திட்டங்களையும் கலந்துரையாடியுள்ளதோடு தங்களின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் காத்தான்குடி நகர சபையிலும் இவற்றைப் பல சந்தர்பங்களில் முன்வைத்தோம்.

இருந்தாலும் இவற்றை சமூகத்தின் நன்மை கருதி ஏற்றுக்கொள்கின்ற அல்லது குறைந்தபட்சம் பரிசீலனை செய்கின்ற மனோநிலை தங்களிடம் இருக்கவில்லை என்பது எங்களின் கசப்பான அனுபவமாகும்.

மேலும் பல உண்மைக்கு புறம்பான விடயங்களை அர்ப்ப அரசியல் இலாபங்களுக்காக நீங்கள் பொதுமக்களின் முன்னிலையில் தெரிவித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் உங்களோடு மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக பேசுவதற்காக நாம் உங்களை கடந்த காலங்களில் பல முறை அழைத்திருக்கின்றோம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கு எவ்வித பதில்களையும் அளிக்காமல் நீங்கள் நழுவிக் கொண்டுள்ளீர்கள்.

இருப்பினும் எம்முடனான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவிருப்பதாக நீங்கள் இப்போது தெரிவித்திருப்பதனை நாம் வரவேற்கின்றோம். தவறுகளை ஏற்றுக்கொண்டு சிறந்த ஆலோசனைகளை உள்வாங்கி மக்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்க வேண்டும் என்ற நேர்மையான உணர்வுடன் இந்தப் பேச்சுவார்த்தைக்கு நீங்கள் முன் வருவீர்களானானால் அது நமது சமுகத்திற்கு மிகவும் நன்மை அளிப்பதாக அமையும் என்பது எமது நம்பிக்கையாகும்.

அந்த வகையில் உங்களுடனான பகிரங்க பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்கான சம்மதத்தினை தெரிவிப்பதென கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற எமது சூறாசபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.

எனவே இப்பேச்சுவார்த்தையை காலம் தாழ்த்தாமல் மிக கூடிய விரைவில் நடாத்துவதற்கு திகதி ஒன்றை எமக்கு அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts