லண்டன் வீதியில் பிரிட்டிஷ் படைச் சிப்பாய் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்
பின்னர் பிரிட்டனில் வாழும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்ச உணர்வு
அதிகரித்திருப்பதாக மத நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்று கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமை படைச் சிப்பாய் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர், பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் மோசமாக அதிகரித்துள்ளதாக ஃபெய்த் மெட்டர்ஸ் என்ற இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு நாட்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான 162 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கி துவேஷ வார்த்தைப் பிரயோகங்களும், முஸ்லிம் பெண்களின் முக்காடு அங்கிகளை பிடித்து இழுத்தல் போன்ற சம்பவங்களும் இவற்றில் அடங்குகின்றன.
சமூக-இணையதளங்களில் இனத்துவேஷ வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படுத்திய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். படைவீரரின் கொலை தொடர்பில் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.-

0 கருத்துகள்: