மட்டக்களப்பு
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் சந்தியில் உள்ள முஸ்லிம்
ஒருவருக்கு சில்லறைக் கடையொன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடை உரிமையாளரான அஸனார் ஹம்சா இது குறித்து கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று மாலை இவர் குறித்த கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் பின்னர் அதிகாலை 2 மணியளவில் வீதியால் சென்றவர்கள் கடை எரிவதாக கொடுத்த தகவலின் பேரில் கடையைச் சென்று பார்த்த பொழுது கடை முற்றாக எரிந்து விட்டிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கரடினாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் செங்கலடி பதுளை வீதியில் வியாபாரம் செய்யும் முஸ்லிம்கள் சகலரும் தமது வர்த்தக நடவடிக்கைகளைக் காலி செய்து விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று எச்சரிக்கைப் பிரசுரம் வெளியாகியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: