வெசாக் தினத்தன்று தீக்குளித்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் அதிர்ச்சித் தகவல்களை
சிங்கள இணையத்தளமொன்று வெளியிட்டுள்ளது. குறித்த தேரர் மரணத்துக்கு 3
நாட்களுக்கு முன்னர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இந்திர ரத்ன தேரர் முன்னர் ஒரு பிரதேச சபை உறுப்பினராக இருந்தார். பின்னர் தொடர்ச்சியான சபை அமர்வுகளுக்கு செல்லாத காரணத்தினால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரதேசபை உறுப்பினராக இருக்கும்போது, மின்சார சபையில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 20 இலட்சமும் ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாகக்கூறி 10 இலட்சமும் மோசடி செய்திருக்கிறார்.
இவ்விடயத்தில் பிக்குவை கைதுசெய்ய பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
தம்புள்ளை பள்ளிவாசலை உடைக்க வந்தபோது, பிக்குகள் கூட்டத்திலிருந்து கூச்சலிட்டவர். பாதுகாப்பு படையினருக்கு தான் அணிந்திருந்த சிவுறவை அவிழ்த்துக் காட்டினார்.
கடந்த வருடம் வீரகெட்டியவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர். அதே ஊரில் இவ்வருடம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினார். இவ்வாறான தகவல்களை குறித்த சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: