அன்பார்ந்த
இலங்கை வாழ் முஸ்லீம்களே ! நாம் விரும்பியோ விரும்பாமலோ பல விடயங்கள்
நடந்தேறிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தன்னுடலில் பெற்றோலை ஊற்றி
இந்திரட்ன ஹாமதுரு அவர்கள் தன்னைத்தானே எரித்து,எரிகின்ற இஸ்லாமிய
எதிர்ப்புத் தீயின்மேலே, மீண்டும் ஒரு பங்கு பெற்றோலை ஊற்றிவிட்டு மறைந்து
விட்டார் !
தீவிர ஹெல உறுமய
பக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர் தன்னைத்தானே எரித்துக்கொள்ள
முன்னரும், எரிந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும்
பயன்படுத்திய சொல் பிரயோகங்கழும் , கூப்பாடுகளும் நமக்கென்னவோ மாதிரி
இருந்தாலும் எந்தவொரு பௌத்த சிங்களவரது அடிமனதிலும் உறங்கிக்கிடக்கின்ற
தான் பௌத்தன் என்கின்ற உணர்வை, மிகவும் சாதுர்யமாக
தட்டிவிட்டிருக்கின்றது என்று கூற ஐயம் கொள்ளத்தேவையில்லை.
இது
இவ்வாறிருக்கும்போது இதனை அடியொற்றி நடைபெறப்போகின்ற முஸ்லீம் எதிர்ப்பு
நடவடிக்கைகள் நமது இன்றைய நிலைப்பாட்டை மிகவும் மோசமான நிலைக்கு
இட்டுச்செல்லும். அவ்வாறான நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியவற்றில் சில
உடனடியாகவும் சில காலப்போக்கிலும் நடைபெற வாய்ப்புண்டு .
உடனடியாக ஏற்படவிருக்கின்ற விபரீதங்களிலிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற ,
இலங்கை முஸ்லீம்களை வழிநடாத்தக்கூடிய குழுவினர் என அடையாளம்
காணப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மரணம் வெறும்
ஒரு சம்பவமல்ல ஒரு வரலாறாகி விட்டது. இவரது அந்திமக்கிரிகைகள்
நடைபெறும்வரை முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேச முஸ்லீம்
இளைஞர் யுவதிகள் மிகவும் கவனமாகவும் , விழிப்பாகவும் இருக்க வேண்டும்.
எந்த ஒரு சிறு உரசலும் இலகுவில் தீப்பற்றிக்கொள்ள வகை செய்யும்.
அத்தியாவசியமான தேவைகளானாலும் சில நாளைக்கு வீட்டை விட்டு வெளியேறுவதை
முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். பெரும்பான்மை இன சகோதரர்களது முன்னால
சத்தமிட்டு சிரித்து சந்தோசமாக இருப்பதை காட்டிக்கொள்ளாதீர்கள் ,
சுற்றுப்பிரயாணங்கள் செல்வதை தற்காலிகமாக தள்ளி வையுங்கள், வியாபாரம்
செய்பவர்கள் முடிந்தளவு விட்டுக்கொடுப்பதுடன் பொறுமையாகவும்
இருங்கள்,குறிப்பாக வாலிபர்களே மிக மிக எச்சரிக்கையாக இருங்கள். சைத்தான்
பொறுமையை உங்களிடம் இருந்து தூரமாக்கிவிட்டு கோபத்தை உங்களுக்கு
அருகாமையாக்கி விடுவான்
முஸ்லீம் ஊடகங்கள் மறைந்த தேரரது மரணத்தை
எதிர் மறையாக விமர்சனம் செய்வதை நிறுத்துவதுடன்,முடிந்தால் அனுதாபத்தை
வெளிப்படுத்துதல் வேண்டும்.
பேஸ்புக், மற்றும் ஏனைய
ஊடகங்களில் பிக்குவின் மரணத்தை இஸ்லாமிய சார்புடன் விமர்சனம் செய்வோர்
தமது நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். நாம் பூனை கண்ணை மூடிக்கொண்டு
பால குடிப்பது போல இருந்து விடக்கூடாது. முஸ்லீம் உலமாக்கள்
முஸ்லீம்ம்களது பாதுகாப்பானதும்,நிம்மதியானதுமான வாழ்க்கைக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு முஸ்லீம் சமூகத்தை வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம்களை இவர்களிடமிருந்து இருந்து பாதுகாப்பானாக...!
யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம்களை இவர்களிடமிருந்து இருந்து பாதுகாப்பானாக...!
0 கருத்துகள்: