சிரியாவில்
அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2½ ஆண்டுகளுக்கும் மேலாக
பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அவர் பதவி விலக மறுத்து வருகிறார்.
இதனால் ராணுவமும், மக்களின் ஆதரவு புரட்சி படையும் தொடர்ந்து போரிட்டு
வருகிறது. எனவே, தினசரி பலர் உயிழந்து வருகின்றனர். அங்கு தொடர்ந்து கலவரம்
நடைபெறுவதால் சுமார் 17 லட்சம் சிரியர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்
அடைந்துள்ளனர்.
முஸ்லீம் நாடான சிரியாவில் புனித ரமலான் மாதத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து கலவரங்களும், வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
ரமலான் மாதம் தொடங்கிய கடந்த 10–ந் தேதியில் இருந்து இதுவரை 2 ஆயிரம் பேர்
கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 639 பேர் பொது மக்கள், 105 பேர் குழந்தைகள்
மற்றும் 99 பேர் பெண்கள். இந்த தகவலை சிரியா மனித உரிமை கண்காணிப்பு குழு
தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சிரியா கலவரத்தில் சாவு எண்ணிக்கை 1
லட்சம் ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன்
தெரிவித்தார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில்
நடந்த கூட்டத்தில் பேசும் போது இந்த தகவலை வெளியிட்டார். அப்போது அங்கு
நடைபெறும் சம்பவங்களுக்கு ஐ.நா.சபையின் கவலையை வெளியிட்டார். இந்த
நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும் கலந்து
கொண்டார்.
0 கருத்துகள்: