பிரசவ
வேதனையால் துடித்த கர்ப்பிணித் தாயை அவசரம், அவ சரமாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்ற போது மருத்துவமனையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை
பெற்றெடுத்த குழந்தை தவறி கீழே விழுந்து மரணமானது.
இச்சம்பவம்
சிலாபம் வைத்தியசாலையில் செவ்வாயன்று (23) இடம்பெற்றது. புத்தளம்,
மதுரங்குளி பகுதியிலுள்ள தலு நாயக்கபுரம் என்னும் குடியேற்றத்தில் வதியும்
டப்ளியூ. எம். சாமினி திரேஸா (22) என்பவர் பிள்ளைப் பேற்றுக்காக முந்தல்
வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்தார். இவருக்கு பிரசவ வலி
அதிகரிக்கவே உடனடியாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில்
கொண்டு செல்லப்பட்டாராம். எனினும் வைத்தியசாலையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை பெற்றெடுக்க அது கீழே தவறி விழுந்து மரணமடைந்துள்ளது.
சிலாபம் திடீர் மரண விசாரணை அதிகாரி எம். கருணாதாச மரணவிசாரணை
மேற்கொண்டார். அதிகரித்த குருதியமுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம்” எனத்
தீர்ப்பு வழங்கினார்.
0 கருத்துகள்: