முஸ்லிம்
பெண்கள் அணியும் அபாயா மற்றும் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையிலான
புர்கா உடையமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று கோரி போதுபல சேனா
குரல் எழுப்பி வருகின்றது. இது அந்த அமைப்பின் மற்றுமொரு பிரச்சார
கருப்பொருளாகியிருக்கின்றது. இந்த அமைப்பு செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி மக்களைக்
கவரும் வகையில் எதையாவது முன்வைத்தால்தான் பிரச்சாரம் நடைபெறுகின்றமை
வெளிப்படுக்னறது. அதற்கு இப்போது புர்கா கருவாகியிருக்கின்றது.
முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்காவை ஏன் தடைசெய்ய வேண்டும் என்று இந்த அமைப்பு முன்வைத்துள்ள காரணத்தைப் பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதே ஒரே காரணமாக இருக்கின்றது. முகத்தை மூடிக்கொண்டு நடமாடும் போது மறைவான திறைக்குள் யார் நடமாடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாது என்றும் இந்த உடை அமைப்பை அண்மைக்காலமாக ஒருசில குற்றச் செய்ல்களுக்கும் பயன்படுத்தியிருப்பதால் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அபாயா மற்றும் முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு சென்று இதுவரையில் நான்கு குற்றச் செயல்கள் நடைபெற்றிருப்பதை நாம் அறிய முடிகின்றது.
மாவனல்லை பிரதேச சபையின் முள்ளாள் தலைவர் இந்த அபாயா மற்றும் புர்காவை அணிந்து கொண்டே சென்று அவரது எதிரியை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கண்டியில் வங்கியொன்றில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது.
மாவனல்லையில் ஏற்கனவே ஒரு கொள்ளை முயற்சியொன்றும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இந்த மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முகத்தை மூடிய நிலையில் குற்றச்ச யெல்களில் ஈடுபட்ட மூன்று சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.மற்றொரு சம்பவம் மாமா அஸ்மி தொடர்பானதாகும்.
இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து வருகின்ற நிலையில் இந்த நான்கு சம்பவங்களே தெரிந்தவகையில் நடைபெற்றுள்ளன.
எவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதாவதொரு நடத்தை அச்சுறுத்தலாக அமையுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பொலிசாரின் பொறுப்பாக அமைகின்றது. இந்நாட்டில் புர்கா அணியாமலே தினமும் எத்தனை குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இந்த குற்றச்செயல்களுக்கும் புர்கா காரணமாக அமைகின்றதா? ஏன் இந்த குற்றச்செயல்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவற்றைத் தடை செய்யுமாறு கோரிக்கைகள் விடப்படவில்லை? அவ்வாறு செய்யப்படுமானால் அதன் மூலம் நாட்டில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகள். ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட பல குற்றச்சாட்டுக்களை ஓரளவிற்காவது கட்டுப்படுத்த முடியும் அல்லவா?
நாம் தினமும் பத்திரிகைகளப் புரட்டினால் குறநைதபட்சம் ஒரு நாளைக்க 5 இற்கு குறையாத கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கொலைகள் மதுபானத்தை அடிப்படையானதாகவும் சமூகத்தில் நிலவுகின்ற முரண்பாடுகளை அடிப்படையாகவும் கொண்டதாக அமைகின்றன. இவ்வாறு கொலைக்குள்ளாகின்றவர்கள் அப்பாவிப் பொதுமக்களாக இருக்கின்றனர். இவ்வாறு ஒரு நாளைக்கு 5 பேர் வீதம் அநியாயமாக கொல்லப்படுதென்றால் வருடத்திற்கு சராசரியாக 1800 உயிர்கள் அநியாயமாக பலியாகின்றன. இத்தகைய குற்றச் செயல்கள் ஏன் பொதுபலசேனாவின் கவனத்தை ஈர்க்கவில்லை?
அத்துடன் எந்தவவொரு விடயமாவது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமானால் அதுபற்றி கண்டறிந்து பாதுகாப்பு செயலாளருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவிக்க வேண்டியதும் மாற்று நடவடிக்கைகளுக்கான சிபாரிகளைச் செய்ய வேண்டியதும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளது பொறுப்பாகும். அவ்வாறிருக்க பொதுபல சேனாவுக்கு அந்த அதிகாரத்தை வழங்கியது யார்?
இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மிக மோசமான உள்நாட்டு யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக்காலப்பபுதியில் இலங்கை முழுவதும் ஏராளமான சோதனைச் சாவடிகள் காணப்பட்டன. குறிப்பாக மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரும் வரையில் 16 இடங்களில் கடுமையாக சோதனை செய்யும் தடைகள் ஏற்படுத்தப்பட்டு பொலிசாரும் இராணுவமும் கூட்டாக மக்களை சோதனைக்குட்படுத்தினர். வாகனங்களில் இருந்து மக்கள் இறக்கப்பட்டு உடல், பொருள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. அக்காலப்பகுதி இந்நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த காலப்பகுதியாகும்.
நாட்டில் அங்காங்கே தற்கொலைக் குண்டுகளும், கிளமோர் குண்டுகளும் வெடித்துக் கொண்டிருந்த காலப்பகுதி அது. ஆனால் இந்த காலப்பகுதிகளிலும் முஸ்லிம் பெண்கள் இந்த புர்காவை அணிந்து கொண்டு நாட்டில் பரவலாக நடமாடியுள்ளனர். சோதனைச் சாவடிகளில் பொலிசாரினதும் இராணுவத்தினரதும் சோதனைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் முஸ்லிம்கள் அணியும் அபாயாவோ அல்லது புர்காவோ பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவில்லை. அப்படியான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் இல்லை.
அன்றுதான் இந்த புர்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்லாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்புத்தரப்பினர் கருதியிருந்தால் மிகவும் இலகுவான முறையில் புர்காவைத் தடை செய்திருக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் அவசரகாலச் சட்டமும் நடைமுறையில் இருந்தது. ஆனால் அன்று பாதுகாப்புத் தரப்பினர் கூட முழு உடலையும் மறைத்த பெண்களை மிகவும் கண்ணியமாகவும் கொளரவமாகவும் நடத்தியுள்ளனர். இந்த புர்கா இத்தகைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்த காப்பகுதியில் கூட துவேச உணர்வுடன் நோக்கப்படவில்லை. அவ்வாறாயின் இன்று எவ்வாறு இந்த புர்கா பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைய முடியும்?
உண்மையில் அவ்வாறான ஏதும் அச்சுறுத்தல் இருக்குமாயின் அதுபற்றி கவனம் செலுத்தும் உரிமை பாதுகாப்பு அமைச்சுக்கே உரியதாகும். முஸ்லிம்களை காழ்ப்புணர்வுடனும் துவேச உணர்வுடனும் நோக்கும் இனவாதிகளால் அல்ல
.
அத்துடன் வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு புர்கா அச்சுறுத்தலாக அமைகின்றது என்று தம்மிடம் தெரிவித்தாக பொதுபலசேனா அமைப்பு கூறி வருகின்றது. வங்கி முகாமையாளர்கள் தமது கடமைகளுக்கு எந்தவொரு விடயமும் இடையூறாக அமைவதானால் அதுபற்றி முறையிட வேண்டிய அல்லது கலந்துரையாட வேண்டிய இடமும் உயர் அதிகாரியும் மத்திய வங்கியின் ஆளுனரான அஜித் கப்ரால் என்பதோடு இலங்கை மத்திய வங்கி என்பதையும் வங்கிககளின் முகாமையாளர்கள் அறியாதவர்களா?
வங்கிகளின் முகாமையாளர்கள் அதுபற்றி பொதுபலசேனாவிடம் முறையிடுவதென்றால் இலங்கை மத்திய வங்கியின் பொறுப்புக்கள் சில பொதுபல சேனாவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக பொதுபல சேனா குரல் எழுப்ப முடியும். அத்துடன் வங்கிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் பெண்கள் அச்சுறுத்தலாக அமைவதானால் வங்கி முகாமையாளர்கள் அதுபற்றி மத்திய வங்கி ஆளுநனரின் கவனத்திற்கு கொண்டு வந்து மத்திய வங்கி ஆளுநர் அதை நிதி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். அதன்பிறகே அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி ஆராய வேண்டும். ஒழுங்குமுறை இவ்வாறிருக்க எங்கோ இருக்கக்கூடிய ஒரு தீவிரவாத அமைப்பு எவ்வாறு ஒரு இனத்தின் அல்லது சமூகத்தின் நடத்தை வங்கிகளின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தல் என்று கோரிக்கை விடுக்க முடியும். இவ்விடயம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்த வேண்டும்.
இன்று நாட்டில் சுமார் 30 இற்கும் மேற்பட்ட வணிக வங்கிகள் உள்ளன. ஒரு வங்கி இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ வங்கிகள் உள்ளன. ஏதாவதொரு வங்கிக்கு முஸ்லிம்கள் அச்சுறுத்தல் என்று அந்த வங்கி அறிவிக்குமானால் அந்த வங்கியை விட்டுவிட்டு இன்னொரு வங்கியை நாட முடியும். எனவே வங்கிகள் இவ்விடயத்தில் முஸ்லிம் வாடிக்கையாளர்களின் சுய கௌரவத்திற்கும் நலன்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கைகளை ஏடுக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன.
ஆனால் அண்மையில் வெளியாகிய வாராந்த ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வங்கிகள் பலவற்றின் முகாமையாளர்கள் வழங்கியிருந்த நேர்காணலில் எவரும் அவ்வாறான கோரிக்கைகளை விடுத்ததாகவோ அல்லது முஸ்லிம் பெண்களின் உடை வங்கிககளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறியதாகவோ தெரிவித்திருக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மாட்டிற்காகவும் புர்காவிற்காகவும் குரல் எழுப்பும் பொதுபல சேனா ஏன் அவர்களது சமூகத்தில் மதுபானத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்தாதிருப்பது. இந்த மதுபானம் காரணமாக தினமும் எராளமான பெண்கள் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சில சந்தர்ப்பத்தில் மதுவுக்கு அடிமையான ஆண்களின் தொல்லை தாங்காது குடும்பப் பெண்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. தினமும் சிங்கள மொழி மூலமான பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகளும் தகவல்களும் இந்த மதுவால் எந்தளவுக்கு அந்த சமூகம் பாதிக்கப்பட்டுள்ளது என்தற்கு சான்றாக அமைகின்றது.
பொதுபல சேனா பொளத்த மதத்தையும் பௌத்த சமூகத்தையும் பாதுகாப்பதற்காக செய்ய வேண்டியவை ஏராளம் இருக்கையில் ஏன் இவ்வாறு முஸ்லிம் பெண்களது உடையிலும் முஸ்லிம்களது மத விடயங்களிலும் கை வைக்க முற்பட்டுள்ளது? அத்துடன் ஆபாசமான முறையில் குட்டைப் பாவாடையுடன் பின்னால் இருந்து பார்த்தால் உள்ளே இருப்பது வெளியே தெரியும் வகையில் நடமாடுவதைத்தான் பொதுபல சேனா வரவேற்கின்றதா? இவ்வாறுதான் முஸ்லிம்களும் ஆபாசமாக நடமாட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றதா? இவ்வாறான உடைகளும் நடத்தையும் ஒரு இனம் கட்டிக் காத்து வரும் இறுக்கமான கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சிதைத்து அழிப்பதாக பொதுபல சேனாவுக்கு தென்படவில்லையா?
பொதுபலசேனா அடிக்கடி கூறிக்கொள்ளும் ஒரு விடயம்தான் பழமைவாத முஸ்லிம்கள் அவர்களுடன் இருக்கின்றனர் என்றும் தகவல்களை வழங்குகின்றனர் என்பதும். இலங்கை வாழ் முஸ்லிம்கள் பற்றி இதுவரையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை நாம் உற்று நோக்குகின்றபோது பொதுபலசேனாவுக்க தகவல் வழங்கி வருகின்ற பழமைவாத முஸ்லிம் அமைப்பு வழங்கும் தகவல்கள் அந்த அமைப்பை தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக அமைவதுபோன்று தெரிகின்றது. இந்த பழமைவாத முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கருதக்கூடிய ஒருவர் அண்மையில் தொலைக்காட்சி சேவையொன்றில் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் 700 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இது அவர் இலங்கை வாழ் முஸ்லிம்களது வரலாற்றை சரியாக அறியாமல் குறிப்பிட்ட தகவலாகும்.
இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்து குடியேறியமை மற்றும் அரேபியருக்கும் இலங்கைக்குமான தொடர்பு ஏற்பட்டு எவ்வளவு காலம் என்பதுபற்றி இலங்கை முஸ்லிம்களது வரலாறு பற்றி ஆராய்ந்துள்ள வரலாற்று நூல்களைப் புரட்டினால் அறிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக பிரபலமான வரலாற்றாசிரியர்களான பேராசிரியர் கார்ல் குனவர்தன, பி.வி.ஜே. ஜயசேகர, லெஸ்லி குனவர்தன, பந்துல குனவர்தன, லோனா தேவராஜா போன்ற இலங்கை வரலாறு பற்றி ஆய்வுகளைச் செய்து நூல்களை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்களது குறிப்புக்களின்படி இலங்கையில் முஸ்லிம்கள் கால் பதித்து 1200 வருடங்களுக்கு மேலாகின்றது என்று பதிவாகியிருக்கின்றது. அதற்கு முற்பட்ட காலம் தொட்டே இலங்கைக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான வாணிபத் தொடர்புகள் இருந்து வந்திருப்பதாக குறிப்புகள் கூறுகின்றன. இவ்வாறிருக்க முஸ்லிம்கள் இந்நாட்டில் 700 வருடங்கால இருக்கின்றனர் என்று கூறி முஸ்லிம்களது பூர்வீக உரிமைகளை மறுக்க முடியுமா? இந்த ஒரு விடயத்தில் இருந்தே பழமைவாத முஸ்லிம் என்று கூறிக்கொள்பவர்களால் வழங்கப்படுகின்ற முஸ்லிம் சமூகம் பற்றிய தகவல்கள் எந்தளவுக்கு சரியானதாக அமையலாம் என்று ஊகிக்க முடிகின்றது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடிய முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு இன்றைய நிலையில் பாரிய பொறுப்பு இருந்து வருகின்றது. அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கின்ற நிலையில் அரச கொள்கையைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தாலும் முஸ்லிம்களது உரிமைகள், சலுகைகளுக்கு பாதகமான நிலைமைகள் ஏற்படுமானால் அதுபற்றி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெளிவுபடுத்தி சரியான விளக்கங்களை முன்வைக்க வேண்டியது தலையாய கடமையாகும்.
1994 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் அண்டு காலப்பகுதிக்குள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அன்றை சந்திரிகா பண்டாநாயக்கா குமாரதுங்காவின் ஆட்சியல் முக்கியமான அமைச்சருமாக இருந்த எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் வாழ்ந்த சந்தர்ப்பத்திலும் அவ்வப்போது பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிர்கொண்ட சந்தர்ப்பங்கள் இருந்தன. அத்தகைய சந்தர்ப்பங்களில் அவர் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த எல்லா முஸ்லிம் உறுப்பினர்களையும் ஒன்று திரட்டி முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளின்போது ஒர குழுவாக இருந்து கூட்டாக குரல் ஒழுப்புவதற்கான ஒரு நிலைமையை ஏற்படுத்தி செயற்பட்டமையையும் நாம் மறந்துவிட முடியாது.
முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்காவை ஏன் தடைசெய்ய வேண்டும் என்று இந்த அமைப்பு முன்வைத்துள்ள காரணத்தைப் பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதே ஒரே காரணமாக இருக்கின்றது. முகத்தை மூடிக்கொண்டு நடமாடும் போது மறைவான திறைக்குள் யார் நடமாடுகின்றார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியாது என்றும் இந்த உடை அமைப்பை அண்மைக்காலமாக ஒருசில குற்றச் செய்ல்களுக்கும் பயன்படுத்தியிருப்பதால் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.
அபாயா மற்றும் முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு சென்று இதுவரையில் நான்கு குற்றச் செயல்கள் நடைபெற்றிருப்பதை நாம் அறிய முடிகின்றது.
மாவனல்லை பிரதேச சபையின் முள்ளாள் தலைவர் இந்த அபாயா மற்றும் புர்காவை அணிந்து கொண்டே சென்று அவரது எதிரியை கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கண்டியில் வங்கியொன்றில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது.
மாவனல்லையில் ஏற்கனவே ஒரு கொள்ளை முயற்சியொன்றும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இந்த மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முகத்தை மூடிய நிலையில் குற்றச்ச யெல்களில் ஈடுபட்ட மூன்று சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்களும் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.மற்றொரு

0 கருத்துகள்: