இஸ்ரேலியர்களுக்கு
விமானச் சீட்டு வழங்க மறுக்கும் சவுதி எயார்லைன்ஸ் நடவடிக்கைக்கு எதிராக
அமெரிக்காவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேலியர்களை ஏற்ற
மறுக்கும் தமது நிலைப்பாடு தொடர்பாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சவதி அரேபியா இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை, எனவே எமக்கும்
அவர்களுக்கும் எந்தவிதமான ராஜதந்திர உறவும் இல்லை. நாம் அங்கீககரிக்காத ஒரு
நாட்டின் பிரஜையெனக் கூறிக்கொள்வோரை ஏற்றும் தேவை எமக்கில்லை, ஏனெனில்
விமானப் பயணங்களின் போது சில வேளைகளில் இடை நிறுத்தம் தேவைப்படுகிறது.
அவ்வேளையில் விமானம் தாமதமானால் பயணிகளை நாட்டிற்குள் அழைத்துச் சென்று
தங்குமிட வசதியும் தரும் தேவையிருக்கிறது. இஸ்ரேலிய பிரஜைகளை நாம் அவ்வாறு
செய்ய முடியாது.அதனால் எம்மால் இஸ்ரேலியர்களுக்கு விமானப் பயணச் சீட்டுகள்
வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டே
இவ்விவகாரம் பேசப்பட்ட போதும் அப்போது இது வெறும் ஊகமாகவே இருந்த நிலையில்
தற்போது சவுதி எயார்லைன்ஸ் தொலைபேசியிலும் தமது இணையத்திலும் கூட இதனை
தெளிவாக்கியிருப்பதனால் அமெரிக்க சட்டப்படி இந்நிறுவனத்திற்கு எதிராக
வழக்குத் தொடர்வதோடு அமெரிக்க விமான நிலையங்களை பாவிக்க விடாமல் தடுக்கவும்
முடியும் என தெரிவிக்கும் சில அரசியல்வாதிகள் தற்போது அதற்கான
முன்னெடுப்புகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: