எகிப்தின்
ஜனாதிபதி முஹம்மது முர்சி பதவியை ஏற்றுக்கொண்டதிலிருந்து பல பிரச்சினைகளை
சந்தித்தாலும் அண்மையில் மிக பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
நேரிட்டது . இந்த பிரச்சினைகள் யாவும் அவரால் சுயமாக ஆட்சியை செய்ய
முடியாமல் அவரை தடுமாற வைத்து கொண்டும் இருந்தது . பின்னர் அவர் பதவி
விலகவும் அது காரணமாக அமைந்தது . அந்த பிரச்சினைகள் யாவையும் பின்வருமாறு அட்டவணை படுத்தி நோக்க முடியும் .
1. பொருளாதார நெருக்கடி : அண்மைக்கலமாக எகிப்தின் பொருளாதாரம் மிக அடி மட்டத்தில் இருந்து கொண்டு இருந்தது . இதனால் பொருட்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது . இதனால் எகிப்திய மக்கள் முர்சியின் ஆட்சியின் மீது மிக கடும் விசனத்தில் காணப்பட்டனர் . இன்னும் சொல்லப்போனால் எகிப்தின் பொருளாதார வீழ்ச்ச்யின் காரணமாக டொலரின் விலை எகிப்தில் என்றும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்து காணப்படுகிறது . இத்தகைய ஒரு உயர்வு இதற்கு முன் எப்போதும் ஏற்பட்டதில்லை என்பதும் இங்கே குறிப்பிட தக்க விடயமாகும் . அது மட்டுமல்லாமல் இந்த பொருளாதார நெருக்கடி முர்சியின் ஆட்சிக்கு மிக தலை இடியாக இருந்து வந்தது .
2.ஷீயாக்களின் ஊடுருவல் : தற்போது ஷீயாக்களின் ஊடுருவல் எகிப்துக்குள் அதிகரித்துள்ளது . சுற்றுலா எனும் பாணியில் முர்சி ஷீய்யாக்களுக்கு வழியைத்திறந்து கொடுத்து இருந்தார் .இது எகிப்து இஸ்லாமியவாதிகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது . ஏனென்றல் ஷீயாக்களின் நடவடிக்கை இஸ்லாத்திற்கு எந்தளவு மிக பாரதூரமானது என்பது வெட்ட வெளிச்சமாகும் . இதன் காரணமாகத்தான் முன்னைய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஷீயாக்கள் எகிப்துக்குள் ஊடுரவ விடாமல் மிக கவனமாக இருந்தார் . அவரிடம் இஸ்லாம் இல்ல விட்டாலும் ஷீயாக்களின் எச்சிரிக்கையை உணர்ந்து தடுத்தது பாராட்ட பட வேண்டிய விடயம் தன் . இப்படி ஒரு நிலையேனும் முர்சியிடம் இல்லாது தான் இந்த இஸ்லாமியவாதிகளின் விசனத்திட்கு காரணமாகும் .
3.நீதிமன்ற ஆதரவின்மை : எகிப்தின் நீதிமன்றங்களும் சரி , நீதிபதிகளிலும் சரி முர்சியின் முடிவுக்கு வெளிரங்கமகவே தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் .இதனால் முர்சியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தவித்து கொண்டு இருந்தார் . இந்த வகையில் தான் முர்சி எடுத்த பாராளமன்ற தேர்தல் நடத்தும் உரிமையை கூட எகிப்தின் நீதிமன்றம் நிராகரித்து விட்டதுமாகும் .
4.ஊடக ஆதரவின்மை : நீதித்துறை மாதிரியே ஊடகத்துறையும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகவே முர்சிக்கு எதிராக தெரிவித்து வந்தன . எகிப்திய மக்கள் அதிகம் ஊடகங்களையே நம்மி இருக்கின்ற காரணத்தால் இந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் மூலம் தம் நிலைமைகளை முர்சிக்கு எதிராக மக்கள் மாற்றி வந்தனர் . ஆனால் எகிப்தின் ஆய்வாளர்கள் சொல்லும் போது முர்சி நீதித்துறையும் , ஊடகத்துறையும் தனது கட்டு பாட்டில் வைக்க தவறி விட்டார் என்று கூறுகின்றனர் . இதற்கு காரணம் சொல்லும் போது முர்சிக்கு அரசியல் முதிர்ச்சி இன்மையே காரணம் என்று கூறுகின்றார்கள் .
5.எதிர் கட்சி எதிரி கட்சியாக உள்ளமை : ஒரு நாட்டின் எதிர் கட்சி எதிர் கட்சியாக இருக்க வேண்டுமே ஒளியே எதிரி கட்சியாக இருக்க கூடாது . ஆனால் எகிப்தின் எதிர் கட்சிகள் நேரடியாகவே முர்சிக்கு எதிரியாகத்தான் இருந்து கொண்டு இருந்தார்கள் . இந்த நிலை முர்சியின் அரசியல் காய் நகர்த்தலுக்கு மிக தலை இடியாக இருந்தது .
6.மக்களின் ஆயுத கலாச்சாரம் : எகிப்தின் புரட்சிக்கு பின்னர் எகிப்து மக்களிடத்தில் ஆயுத கலாச்சாரம் மிக சர்வ சாதாரணமாக நடைமுறையில் உள்ளது . இதன் காரணமாக ஒருவர் இன்னொருவர் இடத்தில் கொஞ்சம் கோபாமாககூட பேச பயப்படுகின்றனர் . ஏன் சில நேரங்களில் மக்களிடையே நடக்கும் பிரச்சினையில் தலையிடாமல் காவல் துறை கூட ஒதுங்கி நிக்கும் ஒரு சூழ்நிலையை இந்த ஆயுத கலாச்சரம் ஏட்படுத்தி இருந்தது . இதுவும் எகிப்தின் அரசியலில் ஒரு தலை இடியாகத்தான் இருந்து கொண்டு வந்தது .
7. இனம் தெரியாத குழுவின் தாக்குதல் : அண்மைக்காலமாக எகிப்தில் ஒரு இனந்தெரியாத குழு ஓன்று தாக்குதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தது . இவர்கள் தங்களுக்கு black block என்று பெயர் சூட்டி இப்படியான தாக்குதல்களை நடத்தி வந்தனர் . இவர்கள் தங்கள் முகங்களை கருத்த முகமூடி போன்ற ஒரு கவசத்தால் மூடி காணப்படுவார்கள் .இன்று வரைக்கும் இவர்கள் யார் என்பதை எகிப்தின் பாதுகாப்புபடையாலோ , காவல் துறையாலோ , உலவுத்துரையலோ கண்டு பிடிக்க முடியவில்லை . கண்டு பிடிக்க முடியவில்லையா ? அல்லது கண்டு பிடிக்க விருப்பமில்லையா ? என்று தெரியவில்லை.
8.இன வன்முறை : எகிப்தின் முஸ்லிம்களுக்கும் , கிறிஸ்தவர்களுக்கும் இடையில் அண்மைக்காலமாக சில பிரச்சினைகள் இடம் பெற்று வந்தன . சில நேரங்களில் இந்த பிரச்சினை உயிர்களை காவு கொள்ளவும் தயங்கவில்லை . அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஒரு சில மதஸ்தலங்களும் சேத மக்கப்பட்டுள்ளன . இதுவும் முர்சியின் ஆட்சிக்கு ஒரு தலை இடியாகவே இருந்தது .
09.இதை எல்லாத்தையும் விட மிக முக்கிய காரணமாக அமைந்தது முர்சி நம்பிய இராணுவமும் , உள் விவகார அமைச்சரும் காலை வாரி விட்டதாகவும் .
10. பெட்ரோல், மற்றும் டீசல் போன்றவற்றின் பாரிய தட்டுப்பாடு .
நான் இங்கே குறிப்பிட்டது ஒரு சில பிரச்சினைகள் மாத்திரமே இதல்லாத இன்னும் பல பிரச்சினைகளில் சிக்கி எகிப்து எனும் நாடு நடுக்கடலில் பழுதடைந்த கப்பல் போல அல்லாடிக்கொண்டு இருந்தது . எந்த பக்கமும் நகராமல் தத்தளித்து கொண்டு இருந்தது . அந்த கப்பலை காப்பாற்ற வேண்டும் என்றால் ஓன்று கடல் அலை ஓய வேண்டும் அல்லது யாராவது சென்று அந்த கப்பலை பாதுகாப்பாக மீட்டு கடற்கரைக்கு கொண்டு வர வேண்டும் .
ஆனால் கடல் அலை ஓய்ந்து விட்டது. அது தான் முர்சியின் பதவி கவிழ்ப்பு .

0 கருத்துகள்: