பிரிட்டிஷ் கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ள, சவுதி இளவரசி (என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் பெண்), கடந்த இரு மாதங்களில் தமது பர்ஃபியூம் செலவே 1 மில்லியன் டாலர் என்று நீதிபதி முன் தெரிவித்தார்.
நேற்று வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த இவர், அதி விலையுயர்ந்த ரால்ஸ்-ராய்ஸ் ஆடம்பர காரில் வந்து இறங்கினார். காரின் லைசென்ஸ் பிளேட்டில், HRH என்று பொறிக்கப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் இதே வழக்கில் சாட்சியம் அளித்த மற்றொருவர், தம்மை சவுதி இளவரசி என்று சொல்லிக்கொள்ளும் இவர், ஒருகாலத்தில் எதியோப்பியாவில் ‘மலிவு விலை விபச்சாரியாக’ இருந்தார் என்று கோர்ட்டில் சாட்சியமளித்தார்.

பிரிட்டிஷ் மீடியாவில் ‘மர்ம இளவரசி’ என்று குறிப்பிடப்படும் இவர், 14 மில்லியன் பவுன்ட்ஸ் பெறுமதியுள்ள ஆடம்பர பிளாட்டுகளை வாங்கிவிட்டு, பணம் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் என இருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மோசடி வழக்கே தற்போது நடந்துவருகிறது.

வழக்கு விசாரணைக்காக ரால்ஸ்-ராய்ஸ் ஆடம்பர காரில் முகத்திரை அணிந்து, 5 அங்குல உயர ஹீஸ்ஸூடன் வந்திறங்கினார், ‘இளவரசி’ சரா அல்-அமோடி.

இவருக்கு ஆடம்பர வீடுகளை விற்றவர்கள், “முன்னாள் விபசாரியான இவர், சவுதி இளவரசி என்று பொய் சொல்லி எம்மை ஏமாற்றி, ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார். அவற்றை திரும்ப தரவேண்டும்” என்று மனு செய்துள்ளனர்.



அதற்கு பதிலளித்த சரா அல்-அமோடி, “நான் நிஜமாகவே சவுதி இளவரசிதான். கடந்த இரு மாதங்களில் எனது பர்ஃபியூம் செலவே 1 மில்லியன் டாலர். வேண்டுமானால் ஆதாரம் காட்டவும் முடியும். சவுதியில் இருந்து மாதாமாதம் எனது பாக்கெட் மணியாக 5 மில்லியன் பவுன்ட்ஸ் வந்து சேர்கிறது. நான் இளவரசியாக இல்லாவிட்டால், இவ்வளவு பணம் வருமா?” என்று கேட்டார்.

“சரி. மாதம் 5 மில்லியன் பவுன்ட்ஸ் பணம் வந்ததற்கு வங்கி ஆதாரம் உள்ளதா?” என கேட்டதற்கு, “சவுதியில் நாங்கள் வங்கியெல்லாம் யூஸ் பண்ணுவதில்லை. ஒவ்வொரு மாதமும் ஒரு சூட்கேஸில் பணத்தை போட்டு அனுப்பி வைத்து விடுவார்கள்” என்றார்.

இதே ‘இளவரசி’ சரா அல்-அமோடி மீது முன்பு மற்றொரு வழக்கு தொடரப்பட்டு இருந்தது. தனது ஆண் மாடல் நண்பர் ஒருவருடன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, நைட்கிளப்பில் அட்டகாசம் பண்ணியதுதான், அந்த வழக்கு.

நேற்றைய வழக்கு விசாரணையின்போது வக்கீல் ‘இளவரசி’யிடம் “நீங்கள் மது அருந்துவீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த இவர், “இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் கேட்க முடியாத கேள்வி இது” என்றார்.

இந்த வழக்கில் சாட்சியம் அளித்த எதியோப்பியாவில் பிறந்து தற்போது லண்டனில் பர்னிச்சர் வியாபாரியாக உள்ள நெகாத் அலி, “இந்த பெண்ணை எனக்கு பல காலமாகவே தெரியும். எதியோப்பியாவை சேர்ந்த ‘மலிவு விலை’ விபசாரி இவர். ஏமன் நாட்டில், இவரும், இவரது தாயாரும் ஒரு ரெஸ்ட்டாரென்ட்டும் நடத்தி வந்தனர். இவரது முகத்திரை அணியாத போட்டோ பத்திரிகையில் வெளியானபோது, அடையாளம் கண்டுகொண்டு, நானே சுயமாக சாட்சியமளிக்க வந்துள்ளேன்” என்றார்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts