மனிதனாக இருந்தால் கற்பவனாக அல்லது கற்பிப்பவனாக அல்லது கல்விக்கு உதவி செய்பவனாக இரு நான்காவது நபராக இருக்காதே என்ற நபி மொழியை தான் கடை பிடித்து வருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
2013 04 28 மாலை கண்டி கல்ஹின்னை பட்டகொல்லாதெனிய ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தின 35 வருட நிறைவு விழாவையும் வருடாந்த பரிசளிப்பு விழாவையும் முன்னிட்டு இடம் பெற்ற வைபவத்திள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இவ்வாரும் தெரிவித்தார்.
எமது பிள்ளைகள் உயர்வதற்கு ஒரே வழி கல்வியாகும். கல்விககு பதிலாக பணத்தால் உயரலாம் என சிலர் நினைக்கலாம் ஆனாலும் பணம் நம்மை விட்டு சென்றுவிடக் கூடியது. பணம் இல்லாமல் போனால் என்ன செய்வது. எனவே உயர்வதற்கு ஒரே வழி கல்வியாகும். இன்றைய சமூகத்திற்கு உலகக் கலிவி மட்டும் போதாது. மார்க்கக் கல்வியும் அவசியமானதாக உள்ளது. சிங்கள் மாணவர்கள் பௌத்த மதத்தையும் முஸ்லிம் மாணவர்கள் இஸ்லாம் மதத்தையும் தமிழ் மாணவர்கள் இந்து மதத்தையும் கிரஸ்தவ மாணவர்கள் கிரிஸ்தவ மதத்தையும் படிக்க வேண்டும். அவ்வாரானால்தான் சரியான கல்வி திட்டத்தை எங்கலால் மேற்கொள்ள முடியும்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களது பொன் மொழி ஒன்றை நான் கடை பிடித்து வருகின்றேன். அது, மனிதனாக இருந்தால் கற்பவனாக இரு.அல்லது கற்பிப்பவனாக இரு. அல்லது கல்விக்கு உதவி செய்பவனாக இரு. நான்காவாதாக இருக்காதே என்ற நபி மொழியாகும். நான் சிறு வயதில் நன்றாக கல்வியை கற்றேன் பின் கற்பித்தேன் தற்போது கல்விக்கு உதவி செய்கின்றேன் .
மத்தய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக், பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் உறுப்பினர்; ஏ.எல்.எம்.ரஸான், பாடசாலை அதிபர் ஏ.எஸ்.எம். இக்ராம் ஆகியோரும் இங்கு உரையாற்றினர். பாடசாலையிலும் வெளியிலும் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு இங்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
0 கருத்துகள்: