கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் முஸ்லீம் தேசியக்
கூட்டமைப்பின் தலைவருமான அசாத் சாலி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று
முன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலன்னாவையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அசாத் சாலி பாதுகாப்பு பிரிவினரால் பின்தொடரப்பட்டு வந்த நிலையில் இன்று (02) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு, பின்னர் பிரிந்து சென்று அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்ற நிலையில் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அத தெரண - தமிழ்)

0 கருத்துகள்: