ஆடை மாற்றிக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை, உடுத்து உடுப்புடன் அழைத்துச்சென்றனர். அசாத் சாலியின் மகள் ஆமினாவின் பேட்டி..

காலை வேளையில் ஆடை மாற்றிக்கொள்ளக்கூட அனுமதிக்கவில்லை, உடுத்து உடுப்புடன் வர வேண்டும் என்று அடம் பிடித்து அழைத்துச்சென்ற சி.ஐ.டி இந்திய ஊடகமான ஜுனியர் விகடன் வெளியிட்ட திரிபுபட்ட செய்தியின் அடிப்படையிலேயே எனது தந்தையைக் கைது செய்துள்ளனர்.

காலையிலிருந்து உணவு உட்கொள்ள அஸாத் சாலி மறுத்ததால் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர், சற்றுமுன் வரை குழப்பமான தகவல்களை வழங்கி வந்த நிலையில், தற்போது 15 நிமிட கால அனுமதியுடன் எனது கணவருக்கு பார்க்க அனுமதிக்கயளிக்கப்பட்டுள்ளது, எனவே அவர் இப்போது உணவுடன் சென்றிருக்கிறார். ஆனாலும், எனது தந்தை அதை ஏற்றுக்கொள்வாரா என்று தெரியவில்லை.

எமது கேள்விகளுக்குப் பதிலோ, காரணங்கள் தொடர்பான விளக்கமோ, கடந்த வாரம் முதல் குற்றப்புலனாய்வினரின் அழைப்பு தொடர்பாக தகவல் அறிய எமது வழக்கறிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலனளில்லாத நிலையிலேயே இன்று காலை கொலன்னாவயில் எமது உறவினர் ஒருவரது வீட்டில் வைத்து எனது தந்தை பலவந்தமாக அழைத்துச்சென்றார்.

பொலிஸ் உத்தியோகத்தர் லசன்த ரத்னாயக்க, விஷேட அதிரடிப்படையின் (STF) உதவியுடன் வந்தே இக்கைதினை மேற்கொண்டிருக்கின்றனர். அதன் போது பாதுகாப்பு அமைச்சின் விஷேட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டிருக்கிறது.

அஸாத் சாலியின் உடல் நலனில் பெரிதும் கவலை கொண்டுள்ள அவரது மகள் ஆமினா தந்தையின் உடல் நலனுக்கு எந்த ஆபத்து வந்தாலும் அதை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திக்கூறியதோடு தம்மால் கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம் கூடத் தராமல் சி.ஐ.டியினர் புறக்கணிப்பதாகவும், இதன் பின்னணியில் ஏற்கனவே திட்டமிட்ட செயற்பாடு ஒன்றே அரங்கேறுவதாகவும் சோனகர்.கொம்மோடு உரையாடும் போது தெரிவித்தார்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts