எம்மை நாமே வெற்றியடைதல் ஆயிரம் யுத்தங்களில் வெற்றியடைவதிலும் சிறப்பானது" என்ற தொனிப்பொருளில்
ஒருமைப்பாட்டுக்கான பேரணியால் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் அமைதிப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மூவின சமய தலைவர்கள் மற்றும் பல்லின பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் ஆரம்பமான இந்த அமைதிப் பேரணி மார்க்கஸ் பெர்னாந்து மாவத்தை வரை சென்றடைந்தது. இப் பேரணியில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
https://www.facebook.com/onislaam

தேசப்பற்றுள்ள இலங்கை குடிமக்களிடையே பகைமையைத் தூண்டுதலையும் வன்முறைகளையும் இப்பொழுது இங்கேயே முடிவுக்கு கொண்டுவருதலை உறுதிப்படுத்துவதற்கான நேரம் இதுவாகும். இனவாதமும் பகை உணர்வும் உங்கள் மூலம் நிறுத்தப்பட வேண்டும்.

துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற நபர்களை நேரடியாக எதிர்க்கவோ பயமுறுத்தவோ அவர்களை நீங்கள் மீள துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தவோ வேண்டாம். இது நிலைமையை மேலும் உக்கிரப்படுத்தலாம்.

பாடசாலைகளிலும் வேலைத் தலங்களிலும் பகைமைக்கு எதிராக பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அல்லது உதவி குழுக்களை அமைப்பதற்கான வழிகளை தேடுதல்.

எந்தவொரு மதமும் மனிதனுக்கு எதிராகவும் பகைமை பாராட்டுமாறும் குழப்பங்களை ஏற்படுத்துமாறும் கூறுவதில்லை என்பதை அனைவரும் ஞாபகத்தில் இருத்தி கொள்ள வேண்டும்.

பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வலைப்பதிவுகள் ஆகிய இணையத்தள கலந்துரையாடல்களிலும் இனத்துவேசத்திற்கும் மதங்களுக்கு இடையிலான பகையுணர்வை தூண்;டும் செயற்பாடுகளுக்கு எதிராக பேசுவதற்கு பயப்பட வேண்டாம்.

முகநூல் போன்ற சமூகத் தளங்களில் மற்றவர்களை துன்புறுத்தவோ கேலிக்குட்படுத்தவோ அவர்களை பற்றிய
வீண் செய்திகளை பரப்பவோ வேண்டாம்.

ஒருவரை அல்லது ஒரு சமூகத்தை கேவலப்படுத்தும் 'ஹம்வயா", 'தம்பியா", 'தெமளா", 'லன்சியா", 'சக்கிலியா" போன்ற வார்த்தை பிரயோகங்களை எமது அன்றாட பேச்சுக்களில் இருந்து தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இனமத வெறுப்புணச்சிகளுக்கெதிரான வினைத்திறன் மிக்க ஆயுதம் அஹிம்சையே ஆகும். நாம் எதிராளிகள் பயன்படுத்துகின்ற அதே யுக்திகளான பகைமை மற்றும் வன்முறை என்பவற்றை பயன்படுத்தக் கூடாது. இதற்கு பதிலாக நாம் எப்போதும் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிப்பதுடன் வரைமுறைகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ளவும் வேண்டும். எந்தவொரு கட்டத்திலும் அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டும்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts