பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்குத்
தொடரப்பட உள்ளதாக எமது செய்திச் சேவைக்கு தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச்
செயலாளர் அசாத் சாலி அவர்கள் சற்றுமுன் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் பொதுபல சேனா அமைப்பு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சாப்பாட்டில் மூன்றுமுறை எச்சில் துப்பிவிட்டு அந்நிய மதத்தினருக்கு கொடுக்கவேண்டும் என்று அல் குரானில் கூறியுள்ளதாக பொதுபல சேனாவினர் பொய்க்குற்றம் சுமத்தியதற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நீதிமன்றின் உதவியை நாட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், தலைக் கவசம் அணிதல் மற்றும் ஆடைகள் தொடர்பில் பௌத்த பிக்குகள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரரின் சில நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான ஆதாரங்களும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அசாத் சாலி தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்: