சவூதி அரேபியாவில் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.
இதில் 13 பேர் பலியானதாகவும், நான்கு பேரை காணவில்லை என்றும் செய்திகள்
வெளியாகி உள்ளன. மேலும் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் கார்கள்
தத்தளிப்பதையும், மக்கள் மரங்களின் அடியில் ஒதுங்கியிருப்பதையும்
தொலைக்காட்சி செய்திகள் வெளியிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்கள் வெட்ட வெளிகளில் ஒதுங்க வேண்டாம் என்று மக்கள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தலைநகர் ரியாத், பாகா, ஹெயில் ஆகிய இடங்களில் பெய்த பலத்த மழையால் மக்கள்
பலியாகி உள்ளனர். இதனால் சவுதியின் உள்துறை அமைச்சர் இளவரசர் முகமது பின்
நயெப், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் வெள்ளத்தில் சிக்கி அவதிப்படும்
மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.
மேலும் நிலைமையை அவர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த 2009ம் ஆண்டு இதுபோன்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில்
ஜெட்டாவில் 123 பேர் இறந்தனர். பின்னர் 2011ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில்
10 பேர் பலியானார்கள். இது போன்ற அவசர நிலைமைகளுக்கு சவூதி அரசு தயார்
நிலையில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது
0 கருத்துகள்: