அம்பாறை மாவட்டத்தில், பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி
செய்யுமாறு கோரி பெற்றோரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் ஒரு
வாரத்திற்கும் மேலாக நடாத்தி வந்த ஆர்ப்பாட்டம் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலையீட்டினால் திங்கள்
கிழமை (29) காலையில் முடிவுக்கு வந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் எம்.எஸ்.எம். வாசித், அமைச்சர் ஹக்கீமிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிசாம் உடன் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியதனால், கல்விப் பணிப்பாளர் அங்கு 02 ஆம் திகதி நேரில் சென்று நிலைமையை ஆராய முன்வந்ததையடுத்து அந்தத் தகவல் பிரதேச சபைத் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட அதில் ஈடுபட்டோர் இணங்கினர்.
இம் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மாணவர்களும் வகுப்புகளை பகிஷ்கரித்திருந்தனர். தொள்ளாயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும் பொத்துவில் அல் கலாம் மகா வித்தியாலயத்தில் 17 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் க.பொ.த. உயர்தரம் வரை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் உச்ச கட்டமாக, மாணவர் ஒருவரின் தந்தையான ஹமீத் என்பவர் பாடசாலை கூரைமுகட்டில் ஏறி நின்று, உண்ணாவிரதம் இருந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார். ஆர்ப்பாட்டம் முடிவுற்றதையடுத்து கூரையில் இருந்து அவர் கீழிறங்கிய பொழுது அவருக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்: