ராமதாசுமரக்காணத்தில்
வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சித்திரை முழுநிலவு விழாவில்
ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர்
ராமதாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே மரக்காணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட
விழாவில் இரு தரப்பாருக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அரசு பேருந்துகள்
மற்றும் பல கடைகள் சேதப்படுத்தபட்டன. இது தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டு
வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பாமக
நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இன்று
காலை தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் ஜி கே மணி மற்றும்
கட்சி சட்டமன்ற உறுப்பினர் காடு வெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறையில்
அடைக்கபட்டுள்ளனர்.
0 கருத்துகள்: