பிரேசிலில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 245 பேர் உடல் கருகி பலியாயினர். பிரேசில் நாட்டின் சான்டா மரியா நகரில் உள்ள இரவு விடுதியில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.
இதன் ஒரு பகுதியாக வாணவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில்
எதிர்பாராதவிதமாக தீ சிதறல்கள் கேளிக்கை விடுதியின் கூரை மீது விழுந்தது.
உடனே தீப்பிடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விடுதியில் 2
ஆயிரம் பேர் கூடியிருக்கும் வசதி உள்ளது. சம்பவத்தின்போது சுமார் 500 பேர்
வரை இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
விபத்து ஏற்பட்டவுடன்
வெளியான அதிகளவு புகையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலாலும், தப்பிக்க
முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியதாலும்தான் உயிரிழந்தோர் எண்ணிக்கை
அதிகரித்தது.
இறந்தவர்களில் 189 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பலரது உடல்கள் விடுதியில் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதனால்
உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
0 கருத்துகள்: