
தடையை எதிர்த்து விஸ்வரூபத்தின்
தயாரிப்பாளரும், நடிகருமான கமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு
தொடுத்தார். அந்த வழக்கும் அவசர விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு
விசாரணைகள் நடந்தன. அதன் பின் நீதிபதி வெங்கடாச்சலம் படத்தை
பார்த்துவிட்டுதான் தீர்ப்பு கூற முடியும் என்று வழக்கை ஒத்திவைத்தார்.
தான் 26-01-2013 அன்று படைத்தை காண்பதாகவும், 28-01-2013 அன்று அதன் மீது
விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்குவதாகவும் அறிவித்தார் அந்த
அடிப்படையில் பிரசாத் ஸ்டூடியோவில் வைத்து நீதிபதி, அரசின் தலைமை
வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்பட கூடுதல் வழக்கறிஞர்கள் மற்றும்
எல்லாதரப்பு வழக்கறிஞர்கள் என 50 பேர் படத்தை பார்த்தனர்.
பின்னர் வழக்கு 28-01-2013 க்கு
விசாரணைக்கு வந்தது இருந்தும் அன்று தீர்ப்பு வெளியாகவில்லை நீதிபதி
வெங்கடாச்சலம் அவர்கள் நாளை 29-01-2013 க்கு தீர்ப்பு என்று அறிவித்தார்.
அதன்படி 29-01-2013 அன்று மூன்று வழக்கறிஞர்கள் கடுமையாக தங்களது வாதங்களை
எடுத்துவைத்தனர். அரசு தரப்பும் கடுமையாக தங்களது வாதத்தை எடுத்து வைத்தது.
மொத்தம் 7.00 மணிநேரம் நடைபெற்ற விசாரணைக்குப்பின் இரவு 8.00 மணிக்கு
தீர்ப்பு என்று தெரிவிக்கப்பட்டு பின்னர் அதுவம் மாற்றப்பட்டு இரவு 10.00
மணிக்கு படத்தின் மீதான தமிழக அரசின் தடையை விளக்கி தீர்ப்பு வெளியானது.
அரசு வழக்கறிஞர்களும், இஸ்லாமிய
கூட்டமைப்பினர்களின் வழக்கறிஞரும் இத்தீர்ப்பு இடைக்கால தீர்ப்புதான்
நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்று பத்திரிக்கையாளர்களிடம்
தெரிவித்தனர். இந்நிலையில் முதல்வரின் உத்தரவின் பேரில் உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதி தர்மராவ் அவர்களை இல்லத்தில் சந்தித்து மேல் முறையீடு செய்தார்
அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன். மேல் முறையீட்டு மனுவை
பெற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அவர்கள் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை
தள்ளிவைத்தார். அதோடு படத்தின் மீதான தடை 30-01-2013 அன்று காலை 10.30
மணிவரை நீடிக்கும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டார்.
அந்தடிப்படையில் இன்று 30-.01-2013 அன்று
காலை விஸ்வரூப பட வழக்கு அவசர வழக்காக கருதி உடனடி விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையும் நடைபெற்றுகொண்டிருப்பதாக தகவல்கள்
வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த வழக்கை துரிதமாகவும், வலிமையாகவும்
எதிர் கொண்ட தமிழக அரசுக்கு சிறுபான்மையின மக்களின் சார்பாக மாபெரும்
நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 கருத்துகள்: