
ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட
பூமியில் இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது ஃபலஸ்தீன் மக்களின் மனித
உரிமைகளை மீறுவதாகும் என்று ஐ.நாவின் மனித உரிமை கமிஷனின் அறிக்கை
கூறுகிறது.
இஸ்ரேல் குடியிருப்புகளை கட்டுவது,
ஃபலஸ்தீன் மக்களை அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து வெளியேற்றி அவர்களின்
வீடுகளையும், சொத்துக்களையும் அழித்து வருகிறது. குடியிருப்புக்களின்
கட்டுமானம் தான் பிராந்தியத்தின் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும். மனித
உரிமைகளை கடுமையாக இஸ்ரேல் மீறி வருகிறது. அனைத்து குடியிருப்பு
கட்டுமானங்களையும் நிறுத்த வேண்டும் என்று இந்த அறிக்கையை தயாரித்துள்ள 3
உறுப்பினர்களைக் கொண்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக
ஃபலஸ்தீன் மக்கள் தங்களது பிறந்த மண்ணை விட்டு வெளியேறும் சூழலை
உருவாக்கியுள்ளது. தொடர்ந்து இஸ்ரேல் அரசு இப்பகுதிகளில் குடியிருப்புகளை
அதிகப்படுத்த அனுமதி வழங்கியுள்ளது என்று ஐ.நா விசாரணை குழுவின்
போட்ஸ்வானாவைச் சார்ந்தா உறுப்பினர் யுனிட்டி டவ் கூறுகிறார். மூன்று
உறுப்பினர்களை கொண்ட குழுவின் விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைக்கவில்லை.
புதிய விசாரணைக் குழுவின் அறிக்கையை
தொடர்ந்து ஐ.நா மனித உரிமை கமிஷனுக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான
கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளது. ஃபலஸ்தீனில் குடியிருப்புக்களை
கட்டுவதை நிறுத்த கோரியதால் மனித உரிமை கமிஷனின் நேற்று முன் தினம் நடந்த
கூட்டத்தை இஸ்ரேல் புறக்கணித்தது.
இதனிடையே சிரியாவின் ஜம்ராவில் இஸ்ரேல்
நடத்திய அநியாய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேருக்கு காயம்
ஏற்பட்டது. இதனை கண்டித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐ.நா
சார்ட்டரை மீறும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் போர்
விமானங்கள் தங்களின் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக லெபனான் குற்றம்
சாட்டியிருந்தது. இஸ்ரேலுக்கு கடுமையான பதிலடியை கொடுப்போம் என்று
லெபனானில் சிரியாவின் தூதர் அலி அப்துல் கரீம் தெரிவித்துள்ளார். பதிலடி
டெல் அவீவ் வரை ஏற்படும் என்று ஈரானின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர்
ஹுஸைன் அமீர் அப்துல்லாஹியான் கூறினார். இஸ்ரேலுக்கு எதிராக சிரியா
ஐ.நாவில் புகார் அளித்துள்ளது.
0 கருத்துகள்: