
இஸ்லாமிய
தீவிரவாதம் குறித்து தொடர்ந்து இந்தியாவுக்கு முன்னெச்சரிக்கை அளித்து
வந்த அமெரிக்கா, குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா
தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமான பிறகு மெளனம் சாதிக்கிறது.
2006-ஆம் ஆண்டு மும்பை தொடர்
குண்டுவெடிப்பு மற்றும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பு
ஆகியவற்றில் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி லஷ்கர்-இ-தய்யிபா தலைவர்
முஹம்மது ஆரிஃப் குஸ்மானியை 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீவிரவாதிகளின்
பட்டியலில் உட்படுத்தவேண்டும் என சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரக துணை தூதர்
ஜான் பென்னட்ரி இந்தியன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கராச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும்
குஸ்மானியின் பங்கினை அமெரிக்கா அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் உள்ள
பாதுகாப்பு ஏஜன்சிகள் ஆசுவாசமடைந்தன. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில்
குற்றவாளிகளை கண்டறிவதில் மாநில போலீசும் தோல்வியை தழுவியிருந்தது.
2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பில்
கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர்
ஆகியோரின் பங்கு வெளியானதை தொடர்ந்து தாக்குதலின் பின்னணியில் ஹிந்துத்துவா
தீவிரவாதிகள் செயல்பட்டிருக்கலாம் என ஐ.பி சந்தேகித்தது. ஹிந்துத்துவா
தீவிரவாத இயக்கங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்த துவங்கியது அக்காலக்
கட்டத்தில்தான். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் சர்வதேச அளவிலான
முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு அதிகாரிகள் சி.ஐ.ஏ மற்றும்
எஃப்.பி.ஐயிடம் கேள்விகளை எழுப்பினர். தற்போது உண்மையான குற்றவாளிகளான
ஹிந்துத்துவா தீவிரவாதிகளை என்.ஐ.ஏ கைது செய்த பிறகும் கேள்விகளுக்கு பதில்
அளிக்க அமெரிக்க தயாரில்லை.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில்
குண்டை வைத்த ஹிந்துத்துவா தீவிரவாதியான ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ராஜேந்திர
சவுத்ரியை கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி கைது செய்ததை தொடர்ந்து ஹிந்துத்துவா
தீவிரவாத குறித்த சித்திரம் தெளிவானது. முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து
வெளியேற்றவேண்டும் என்ற சங்க்பரிவார சித்தாந்தத்தின் வலுவான பிரதிநிதியான
சுனில்ஜோஷியின் தலைமையில் ராஜேந்தர், லோகேஷ் சர்மா, டான் சிங், கமல்
சவுஹான், அமித் சவுஹான் ஆகியோர் ஒரே கும்பலாக இயங்கினர்.
இவர்களின் பயங்கரவாதத்திற்கு பல ஆண்டுகள்
அனுபவம் உண்டு. மத்திய பிரதேச மாநிலம் துங்கர் காவோனில் ஆர்.எஸ்.எஸ்
அலுவலகத்தில் 1999-ஆம் ஆண்டு சுனில் ஜோஷியும், ஹிந்துத்துவா தீவிரவாத
கும்பலும் டெட்டனேட்டர்களை பரிசோதித்தனர் என்று சாட்சிகள் கூறுகின்றனர்.
2001-ஆம் ஆண்டு இக்கும்பல் கன்னியாஸ்திரி
மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. 2002-ஆம் ஆண்டு தப்லீக் ஜமாஅத்தினரை
குறிவைத்து போபால் ரெயில்வே ஸ்டேசனில் குண்டை வைத்தனர். 2004-ஆம் ஆண்டு
ஜம்முவில் உள்ள மஸ்ஜித் மீது க்ரேனேடை வீசினர். 2004-ஆ ஆண்டு முதல்
2006-ஆம் ஆண்டு வரை மஹராஷ்ட்ராவில் உள்ள மஸ்ஜிதுகள் மீது தாக்குதல்
நடத்தினர்.
இவ்வளவு தாக்குதல்களை நடத்தியபிறகும்
தங்கள் மீது புலனாய்வு ஏஜன்சிகளின் பார்வை திரும்பாததால் அதனை பாதுகாப்பாக
கருதி மேலும் மேலும் தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டம் தீட்டினர்.
2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நந்தத்தில் வெடிக்குண்டுகளை தயாரிக்கும்
வேளையில் குண்டுவெடித்ததில் பஜ்ரங் தளைச் சார்ந்த ஹிமான்ஷு பான்ஸே, நரேஷ்
ராஜ்கோண்டவால் ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சங்க்பரிவார தீவிரவாதம்
மெல்ல வெளிவரத் துவங்கியது. 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி
மலேகானில் ஒரு மஸ்ஜிதை சுற்றிலும் 4 குண்டுகள் வெடித்தன. ஆனால், விசாரணை
எதுவும் மேற்கொள்ளாமல் போலீஸ் 9 அப்பாவி ‘முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது.
2006-ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பிலும், மும்பை ரெயில்
நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர்கள் என குற்றம்
சாட்டப்பட்ட அப்பாவிகளையும் போலீஸ் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது.
மலேகானில் சதித்திட்டம் வெற்றியடைந்ததைத்
தொடர்ந்து ஹிந்துத்துவா தீவிரவாத கும்பல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா
மஸ்ஜித், அஜ்மீர் தர்கா ஆகியவற்றின் மீதும் குண்டுவெடிப்பு தாக்குதல்களை
நிகழ்த்தியது. குண்டுவெடிப்புகளில் உபயோகித்த சிம்கார்டுகளை குறித்த
விசாரணை ஜார்க்கண்டில் ஜாமாத்ராவில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் தேவேந்திரா
குப்தாவை சென்று அடைந்ததை தொடர்ந்து உண்மை வெளியானது.
ஆனால், பிரக்யசிங் தாக்கூருக்கு எதிராக
அறிக்கை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ் தேவேந்திர குப்தாவை இயக்கத்தில் இருந்து
வெளியேற்றவில்லை. ஹிந்துத்துவா பயங்கரவாதிகளான ராம்ஜி கல்சங்கரா, சந்தீப்
டாங்கே ஆகியோர் தலைமறைவாக உள்ள ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள்
கைது செய்யப்பட்டால் மேலும் பல சங்க்பரிவார தீவிரவாதிகள் சிக்குவர்.
0 கருத்துகள்: