
வாஷிங்டன்:அமெரிக்காவின்
கொள்கைகளை முஸ்லிம் சமூகத்திடம் வெற்றிகரமாக விளக்கம் அளிப்பதில் அமெரிக்க
அரசு தோல்வியடைந்துவிட்டது என்று பதவி விலகும் அமெரிக்க வெளியுறவுத்துறைச்
செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இத்தகைய தோல்விகளின் பொறுப்பை
தான் ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கொள்கைகளையும், நிகழ்ச்சி
நிரல்களையும் விளக்கும் விதமான நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டது.
அரபு-முஸ்லிம் ஊடகங்கள் பல வேளைகளில் அமெரிக்காவின் கொள்கைகளை
விமர்சித்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, பதில் அளிக்கவோ
அமெரிக்காவால் இயலவில்லை என்று ஹிலாரி கூறினார்.
புதிய வெளியுறவு செயலாளராக டெமோக்ரேடிக் செனட்டர் ஜான் கெர்ரி இன்று பதவி ஏற்பார்.
0 கருத்துகள்: