விஸ்வரூபம் படம்: கத்தர் அரசிற்கு விளக்கி படத்தை தடை செய்ய வைத்த கத்தர் TNTJ
மற்ற அரபு நாடுகளைப் போலவே ,கத்தர் நாட்டிலும் கேடுகெட்ட “விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்படமாட்டாது என எண்ணயிருந்த நிலையில் 24-01-2013 வியாழன் அதிகாலை 5:30 மணிக்கு ‘கல்ஃப் டைம்ஸ்’ நாளிதழ் அலுவலகத்தில் பணிபுரியும் கத்தர் தவ்ஹீத் ஜமா’அத் செயற்குழு உறுப்பினர் சகோதரர்.தஞ்சாவூர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள், கத்தர் மண்டல அலுவலகம் மற்றும் நிர்வாகிகளை டெலிஃபோனில் தொடர்பு கொண்டு ,”இன்று மாலை தோஹாவிலுள்ள தியேட்டரில் “விஸ்வ(விஷம)ரூபம்” திரைப்படம் வெளியிடப்பட இருக்கிறது என்று இன்றைய நாளிதழில் செய்தி போடப்பட்டிருக்கிறது’ என்று கூறினார்.
உடனே,மண்டல நிர்வாகிகள் கத்தர் அரசு இஸ்லாமிய பிரச்சாரத்துறை( ஃபனார் ) அலுவலர்களை டெலிஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள்.அவர்கள், மொபைலை/தொலைபேசியை எடுக்கவில்லை.
பின்பு,சரியாக காலை 10:43 மணிக்கு,ஃபனார் மேற்பார்வையாளர் – ஸூடான் நாட்டைச் சார்ந்த டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள்,மண்டல தலைவராகிய டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களை மொபைலில் அழைத்து “என்ன விஷயம்,பலமுறை எனக்கு ஃபோன் செய்துள்ளீர்களே!மீட்டிங்கில் இருந்ததால்,மொபைலை எடுக்கவில்லை” என்றார்.அதற்கு டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் , ‘இந்திய வரலாற்றில் “விஸ்வ(விஷம)ரூபம்” என்ற திரைப்படம் போல், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை’ என்று கூறிவிட்டு , நாளிதழ் செய்தியை மேற்கோள் காட்டி,அதை உடனடியாக கத்தரில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறார் . அதிர்சிக்குள்ளான , டாக்டர்.அலீ இத்ரீஸ் அவர்கள்,அபூ உபைதா என்ற அலுவலரை தொடர்புகொள்ளுமாறு கூறியிருக்கிறார் .
டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் ,அபூ உபைதா அவர்களை சரியாக காலை 11:04 மணிக்கு மேற்சொல்லப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார்கள்.
அதிர்ந்து போன சகோதரர்.அபூ உபைதா அவர்கள்,நன்றி தெரிவித்துவிட்டு , ‘படத்தின் பெயர்-மொழி-திரையிடப்பட இருக்கின்ற தியேட்டர்’ ஆகிய விவரங்களை தனது மொபைல் ஃபோனுக்கு மெசேஜ் மூலம் அனுப்புமாறு கூறியிருக்கிறார்கள்.
அவ்வாறே,சரியாக காலை11:19 மணிக்கு மெசெஜை ,டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் அனுப்பினார்கள்.
காலை சரியாக காலை11:56 மணிக்கு அபூ உபைதா அவர்களே டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்களை தொர்பு கொண்டு ‘நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது-படம் தடை செய்யப்பட்டுவிட்டது-வெளியிடப்ப
இருப்பினும் கத்தர் மண்டல நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட தியேட்டருக்கு கொள்கைச் சகோதரர்களை அனுப்பி படம் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்தனர். ஆய்வு செய்ததில் படம் தடை செய்யப்பட்டது உருதி செய்யப்பட்டது.
அல்லாஹுவிற்கே எல்லாப்புகழும்!
0 கருத்துகள்: